Friday, 28 September 2012

முகம்மது நபி கிளம்புகின்றது வேறொரு பூதம்


ஏற்கனவே நபிகளைப்பற்றிய ஒரு ட்ரெயிலருக்கு உலகத்தை படாதபாடு படுத்திக்கொண்டிருக்கின்றார்கள்.படத்தின் சர்ச்சையை முடித்துக்கொள்ள முனையாது சில நாடுகளில் சில  புரட்சிகரமான எழுத்தாளர்கள் நபிகளுக்கெதிரான படத்தை ஆதரித்தும் எதிர்த்துப்போராடும் முஸ்லீம்களை நையாண்டி செய்தும் தமது கருத்துக்களை வெளியிட்டு எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றிக்கூத்துப்பாக்கின்றார்கள்.இதைப்பற்றிய ஒரு பதைவை முன்பே இட்டிருந்தேன்.அந்தப்பதிவில் நான் சர்ச்சைக்குரிய அந்த வீடியோவையும் இட்டிருந்தேன்.நபிகளுக்கெதிரான கருத்துக்களை கூறுவிட்டார்கள் நபியைஅவமானப்படுத்திவிட்டார்கள் என்று குமுறும் சிலரை விசாரித்ததில் அவர்கள் வெறும் கேள்விப்பட்டிருக்கின்றார்கள் அவளவுதான்.அந்த வீடியோவைப்பார்த்திருக்கவில்லை தாம் எதர்க்காக எதிர்க்கின்றோம் என்றவிடயத்தை செவிவழியாக அறிந்திருக்கின்றார்கள் அவ்வளவுதான்.பதிவின் இறுதியில் அந்த வீடியோவை யூ டியூப்பில் இருந்து  ஏன் நீக்கவேண்டும் என்பதற்காக காரணத்தையும் இறுதியில் நீக்கவேண்டும் என்றும் கூறியிருந்தேன் அந்தப்பதிவுக்கு எனக்கு நல்லபதில் கிடைத்தது.


தெரியாமலே பலர் வீறுகொண்டெழுகின்றார்களே என்றுதான் லிங்கைப்போட்டிருந்தேன்.சரி தப்புத்தான் என்று நீக்கியபின் ஒரு பின்னூட்டம் கிடைத்ததுபாருங்கள்."முகம்மட் சல் உனக்குமட்டுமில்லையெடா உலகத்துக்கே தூதர்..எவன் அவர அவமதித்தாலும் உடம்பில தலை இருக்காது.கெயார்ஃபுல்..."

எங்குபோய்த்தலையை முட்டிக்கொள்வது என்று தெரியவில்லை.இவர்களுக்கு நான் ஆதரவளித்தேனே என்று தோன்றியது.சரி எது எப்படியிருந்தாலும் அந்த மதிப்பிற்குரிய பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே....


இது இப்படி இருக்க சர்ச்சைக்குரிய படத்தின் இயக்குனர்Nakoula Basseley Nakoulaஐ கைதுசெய்திருக்கின்றார்களாம்.காரணம்  Innocence of Muslims என்ற சர்ச்சைக்குரிய படம் அல்ல.2010 இல் இவர் செய்த குற்றத்திற்காக 5 ஆண்டுகள் நீதிமன்ற அனுமதியில்லாமல் இணையத்தளம் கொம்பியூட்டர்களை பயன்படுத்தக்கூடாது என்று தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.இவர் அதை மீறிவிட்டார் இதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.இக்குற்றத்திற்கு இவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மற்றுமொரு கைது நடவடிக்கையும்  நடைபெற்றுள்ளது.பிரேசில் நாட்டின் யூ டியூப் கிளையின் உயர் அதிகாரியான ஃபபியோ ஜொசே சில்வா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பிரேசிலில் உள்ள நஷனல் இஸ்லாமிக் என்ற அமைப்பு  தொடர்ந்த வழக்கினடிப்படையில் இக் கைது நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டுள்ளது.படத்தின் ட்ரெயிலரை 10 நாட்களுக்குள் நீக்கவேண்டும் என்று நீதிமன்றம் கட்டளையிட்டிருந்தது.ஆனால் கட்டளை நிறைவேற்றப்படவில்லை.இதைத்தொடர்ந்து இக்கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இது யூ டியூப் தளத்தில் சில சலனங்களை ஏற்படுத்தினாலும் இது பிரேசிலில் வெற்றியளிக்கலாம் ஆனால் யூ டியூப்பிடம் இது பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கமுடியாது.
அவனவன் இப்படத்தால் கொந்தளித்துப்போயிருக்க மேலும் இதே பாணியில் 2 படங்கள் வெளிவரப்போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இப்படங்களின் இரு இயக்குனர்களும் இஸ்லாமில் இருந்து வேறு மார்க்கத்திற்கு மாறியவர்கள்தான்.ஒரு இயக்குனரின் பெயர் மொசாப் ஹசன் யூசுப் 30 மில்லியன் டொலர் செலவில் படத்தை எடுக்கின்றார் பிறப்பால் பலஸ்தீனர் தற்போது இவர் அமெரிக்க சிட்டிசன்.படத்தின் டைட்டில் மொஹமட்.மற்றைய இயக்குனரின் பெயர் அலி சினா இவர் கனடா  நாட்டை சேர்ந்தவர்.10 மில்லியன் டாலர் செலவில் படத்தை எடுக்கின்றார்.

பிரான்ஸிலும் ஒரு விடயம் நாட்டையே குழப்பியது.சார்லி ஹெப்டோ என்ற பத்திரிகை முகம்மதுவின் கேலிச்சித்திரம் ஒன்றை வெளியிட்டது..இதனால் உடனடியாக 20 நாடுகளில் உள்ள பிரான்ஸ் தூதரங்களுக்குப் பாதுக்காப்பு நல்கியது. உலகம் முழுவதும் உள்ள பிரஞ்சு பள்ளிகள் சில மூடப்பட்டன. இதற்கெதிரான இஸ்லாமியப்போராட்டங்கள் முழுவதையும் பிரான்ஸ் தடைசெய்துள்ளது.தடையை மீறிப் போராடத் துணிந்த 150 போராட்டக்காரர்களை உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.இதன்பின்னர்  ஒரு கருத்துக்கணிப்பை மேற்கொண்டார்கள் TNS குழுமத்தால் அண்மையில் கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டது 58 சதவீதம் பேர் பேச்சு உரிமைக்கு ஆதரவுக் கொடுத்துள்ளனர், அதே சமயம் 71 சதவீதம் பேர் இஸ்லாமிய தெருப் போராட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.


ஒரு விடயம் மட்டும் உண்மை நபியை விமர்சித்த இனஸன்ஸ் ஒஃப் முஸ்லீம் திரைப்பட ரெயிலர் எதிர்ப்பின் முன் இந்தப் பிரச்சனை பெரிதாக எடுபடவில்லை....

போகிறபோக்கைப்பார்த்தால் இனி அல்கொய்தாவே நேரில் இறங்குமோ என்றுதான் எண்ணத்தோன்றுகின்றது..

(தற்போது கிடைத்துள்ள செய்திகளின்படி இயக்குனர் கைதுசெய்யப்பட்டுள்ளார்)

No comments:

Post a Comment