Thursday, 13 September 2012

ரஜனி மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள்


ஜெயா டி.வி-யின் 14-ம் ஆண்டு தொடக்க விழாவில் ஜெயலலிதாவை மேடையில் வைத்துக்கொண்டு கலைஞரை ரஜனி புகழ்ந்து தள்ளியதால் அரசியல் உலகம் சற்று அல்லோலப்பட்டது.இது தொடர்பாக விகடனில் செய்திவெளியாகி இருந்தது.

ஜெயலலிதா முகத்துக்கு நேரே கருணா நிதியைப் புகழ்ந்து பேசி,பரபரப்பு அரசியலுக்கு
 விதை போட்டிருக்கிறார் ரஜினிகாந்த்!(இது எமக்கு 789 ஆவது விதை ..
.எசமான் முளைக்கத்தான்மாட்டேங்குது)


மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன் - டி.கே.ராமமூர்த்தி ஆகியோருக்கு
 பாராட்டு விழா மற்றும் ஜெயா டி.வி-யின் 14-ம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி
 கடந்த 29-ம் தேதி சென்னையில் நடந்தது. விழா அழைப்பிதழில் ஜெயலலிதா
 பெயரைத்தவிர வேறு பெயர்கள் இல்லை.


 ரஜினிகமல் மேடையேறுவதைக்கூட கடைசிவரை சஸ்பென்ஸ் ஆக வைத்திருந்தனர். ஜெயலலிதா வருவதற்கு முன்பே ரஜினி,கமல்கே.பாலசந்தர்,
 இளையராஜாஏவி.எம்.சரவணன் ஆகியோர் மேடையில் அமர வைக்கப்பட்டனர்.
 ஜெயலலி தாவைச் சேர்த்து எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக் கைகள்.
 எம்.எஸ்.வி-க்கும் ராமமூர்த்திக்கும் 'திரை இசை சக்கரவர்த்திவிருதை அளித்து பொற்கிழிகள் வழங்கி கார்களையும் பரிசளித்தார் ஜெயலலிதா.


இதில் ரஜினி பேச்சுதான் ஹைலைட்!''ஜெயா டி.வி-யில் சோ எழுதிய 'எங்கே பிராமணன்’ நிகழ்ச்சியை ரொம்ப ரசித்துப் பார்த் தேன். திடீரென்று அந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு விட்டது. என்ன காரணம் என்று விசாரித்தபோது சோ அதை தொடராமல் இருப்பது தெரியவர... அவரிடமே கேட்டேன்.'முதல்வர் ஜெயலலிதாவும் இதையே என்னிடம் கேட்டார். தொடர முடியாத காரணத்தை அவரிடம் சொல்லிவிட்டேன்’ என்றார். இதில் இருந்து தெரிவது என்னவென்றால்முதல்வர் சொல்லியும் கேட்காத ஒருவர் இருக்கிறார் என்றால் அவர் சோ மட்டும்தான்'' என்று ரஜினி சொன்னபோது எதிரே உட்கார்ந்திருந்தார் சோ. ரஜினியைப் பார்த்து கையை நீட்டிவிட்டுஅப்படியே சீரியஸாக தலையில் வைத்துக் கொண்டார் சோ. இதை அங்கே இருந்த திரையில் காட்ட... கூட்டத்தினர் ரசித்துச் சிரித்தனர்.

தொடர்ந்து பேசிய ரஜினி, ''ஒவ்வொரு மனிதனும் இரண்டு முறை இறக்கிறான். பேரும் புகழும் பெற்றவர்கள் அதை இழக்கும்போது அவர்களுக்கு ஒரு முறை மரணம் நேரும். இரண்டாவதுஉடலில் இருந்து உயிர் பிரியும்போது ஏற்படும். சாகாவரம் பெற்றவர்கள் இறந்தாலும் அவர்களின் புகழ் மறையாது. தமிழகத்தில் பெரியார்,காமராஜர்அண்ணாஎம்.ஜி.ஆர். போன்றவர்கள் மறைந்தாலும் அவர்கள் புகழ் மறையவில்லை. அந்த வகையில் இப்போது அரசியலில் இருக்கும்....'' என்று லேசாக நிறுத்திய ரஜினி...''என் ஆருயிர் நண்பர் கலைஞர்'' என்று சொல்லி அதிர வைத்தார். மேடையில் இருந்த முதல்வரின் முகம் மாற ஆரம்பித்தது. தொடர்ந்து பேசிய ரஜினிஅடுத்ததாக,
''புரட்சித் தலைவி போன்றவர்களின் புகழ் என் றும் அழியாது''என்றும் சொல்லி வைத்தார். 

வலைஉலகத்திலும் ஏனையவற்றிலும்  ஒருவர் அழைக்கமேடையில்நின்றுகொண்டு அவருக்கு எதிரானவரைப்பற்றிபேடுதல் நாகரீகமானசெயலாவிருப்பமில்லையாயின் போகாமலே விட்டிருக்கலாம்.அல்லது அஜித் செய்தவேலையை செய்திருக்கலாமே என்று பதிவுகள் இடம்பெற்றன.

கலைஞரின் மேடைகளில் ஏனோ ரஜனிக்கு இந்த தைரியம் வருவதில்லை.முன்பொருமுறை அஜித் பேசும்போது இவர் எழுந்து நின்று கைதட்டி  ஊடக கவனத்தை தன்பக்கம் ஈர்த்துவிட்டவர்.

மேடையில் ஜெயலலிதாவை கடுப்பேற்றியதும் ரஜனிதான் . வைத்தியசாலையில் இருந்து வந்தபோது முதலில் உடனடியாக சென்று ஜெயலைதாவைப்பார்ட்ததும் ரஜனிதான். நன்றாகத்தான் அரசியல் செய்கின்றார்.

அன்று விகடனில் வெளியாகிய செய்தி

தமிழகம் காப்பாற்றப்பட்டது: ஜெ. உடன் ரஜினி பேச்சு

சென்னைஜூன்.16,2011
"நீங்கள் தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்றதன் மூலம் தமிழகம் காப்பாற்றப்பட்டது,"என்று முதல்வர் ஜெயலலிதாவிடம் நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் பேசினார்.

"
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனவுடன் முதலில் உங்களுடன் தான் பேச முடிவு செய்தேன்," என்றும் முதல்வரிடம் அவர் கூறினார்.


இதற்கு விகடனில் அளிக்கப்பட்ட கொமெண்ட்
Saravanan1 Years ago
ரஜினி ஒரு இரட்டை வேடம் போடுவதில் வல்லவர் (என்ன தான் இருந்தாலும் சூப்பர் ஸ்டார் அல்லவா?). நல்ல வேளை இவர் அரசியலில் குதித்து முதல்வர் ஆக வில்லை. இல்லை நாடு குட்டி சுவர் ஆகி இருக்கும். இப்படி நிலை இல்லாமல் பேசும் மனிதரை நம்பி எப்படி ஒரு கூட்டம் அலைகிறதோ?

ரஜினியால் எந்த விதத்திலாவது முன்னேறியதாக யாராவது சொல்ல முடியுமாஎம்ஜியார் கூட இருந்தவர்கள் வாழ்க்கையில் முன்னுக்கு வந்துள்ளனர். சைதை துரை சாமி என பலர். சிலர் தவறான முறையிலும் எம்ஜியார் பெயரை சொல்லி மேலுக்கு வந்துள்ளனர். அவர்கள் பெயர் வேண்டாம். அது போல கருணா நிதியால்ஜெய லலிதாவாலும் முன்னுக்கு வந்தவர்கள் உண்டு (ஒரு சிலர் நல்ல வழியில்ஒரு சிலர் இவர்களை பயன் படுத்தி கொண்டும்) ஒரு ரசிகன் சொல்ல முடியுமாஇவ்வளவு பணம் வைத்திருப்பவர்ரசிகர்களுக்கு ஹாஸ்பிட்டல் கட்டியிருக்கலாமே?இவர் ரசிகர்களுக்கு என்ன செய்தார்?

அம்மா மீது தவறுகள் இருந்தாலும்ஒரு விசயத்தில் முடிவு எடுத்தால் உறுதியுடன் இருப்பவர். சரியோ தவறோ.

கருணா நிதி கூட இளமை காலத்தில் கொள்கையில் உறுதி என நிறைய செய்திகள் வந்துள்ளன. பிற்காலத்தில் குடும்ப பாசத்தில் கோட்டை விட்டு விட்டார். அது வேறு விசயம்.

ஏன் ரஜினி என்னும் போலி மனிதரை கண்டு மக்கள் அலைய வேண்டும். 2 - 3 வருடத்துக்கு முன்வெட்டப்பட்டுநடு ரோடில் துடி துடிக்க இறந்தாரேஒரு காவல் துறை அதிகாரி. அவர் ஹீரோவா,இல்லை ரஜினி போன்ற போலி மனிதர்களாஇன்னும்யாருக்கும் தெரியாமல்பாகிஸ்தான் தீவிர வாதத்திற்கு பலியாகிறானே,ராணுவத்தில் பணியாற்றி தமிழ் இளைனன்அவன் ஹீரோவா,இல்லை ரஜினியாஉயிரையே பணயம் வைத்துரவுடிகளை சுட்டு கொள்ளும் ஒரு போலீஸ் வீரர்கள் (வெள்ளை துரை) ஹீரோவா,இல்லை ரஜினியா?

ரஜினி ஒரு பிசினஸ் மேன். தமிழ் நாட்டில் உள்ள அப்பாவி இளைனர்களைரசிகர்களி வைத்து வியாபாரம் செய்பவர்.

J.Barani1 Years ago
திரு ரஜினி அவர்களே! நீங்களேதான் 1996ல் ஜெ வென்றால் ஆண்டவனே வந்தாலும் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாது என்று கூறியது! இதுவே கருணா வென்றிருந்தால் இந்நேரம் இதை மாற்றி சொல்லியிருப்பிர்! ஆக மொத்தம் யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுக்கு ஜால்ரா அடிப்பிர்! நீங்கள் அடிக்கடி சொல்வது போல் கருணாநிதி போன்ற எதிரிகளை ஜெ பார்த்துக் கொள்வார். உங்களை போன்ற ஜால்ராக்களிடம் இருந்து அவரை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்! ஒரு மாத மருத்துவமனை வாசம் உங்களுக்கு வாழ்க்கையை புரிய வைத்திருக்கும் என்று நினைத்தேன்! அரசியல்வாதிகளுக்கு ஜால்ரா அடிப்பதை நிறுத்திவிட்டு உங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றதும் எந்த பிரதி பலனையும் எதிர் பார்க்காமல் காவடி தூக்கிமண் சோறு தின்று உங்களுக்காக பிராத்தனை செய்தார்களே உங்கள் முட்டாள் ரசிகர்கள் அவர்களுக்கு ஒரு வேளை சாப்பாடு போடுங்கள்!


Ramani1 Years ago
ரஜினிய போன்ற ஒரு சந்தர்ப்ப வாதி தமிழ் நாட்டில் இல்லை. இவர் சமயத்திற்கு தகுந்தாற் போல் மாற்றி கொள்வார். இவர் 1996ல் ஜெய லலிதா வந்தால் தமிழ் நாடே உருப்படாது என்றார். முற்றிலும் உண்மை. அதன் பின் சந்தர்ப்பதிற்கு தகுந்தாற் போல் மாற்றி கொள்ள ஆரம்பித்து விட்டார்.

இவர், 2010 ல் சன் டிவி தயாரித்த எந்திரன் படத்தில் நடித்தார். அப்ப இவருக்கு திமுக சரியில்லை என்று தெரியாதாஅதை நெருங்கி உள்ள சன் டிவி தயாரித்த படத்தில் நடிக்க முடிந்ததேஅவர் சம்பளம் சுமார் 25 கோடி வரும் வரை திமுகவை பற்றியோதமிழ் நாட்டில் உள்ள ஊழல் பற்றியோ பேச்சே வரலியேஎத்தனை தடவை கருணா நிதியை கூட்டத்தில் புகழ்ந்து பேசியிருப்பார்?ஆனால்திமுக தோற்கும் என்ற நிலவரம் ஆனவுடன்ஓட்டை மறைக்கிற மாதிரி பாவ்லா பண்ணிவேணும்னேஇரட்டை இலைக்கு ஓட்டு போட்டதை காண்பித்து அம்மா கிட்ட இடத்துக்கு துண்டு போட்ட ஆசாமி. என்ன ஒரு நாடகம். கேவலம்.

இப்ப மட்டும் இல்லைஒரு முறை காவேரி பிரச்சினை பற்றி உண்ணா விரதம் சென்னையில் இருந்த போதுஅங்க மக்கள் கிட்ட கை தட்டல் வாங்ககன்னடர்களை கடுமையா தாக்கினார். கொஞ்ச நாள் கழித்துபெங்களூர் வந்துஅவர் படத்துக்கு எதிர்ப்பு வந்தவுடன்இங்க கன்னடதில் பேசி மன்னிப்பு இரட்டை வேடம்.

இப்பவும் இவர் அம்மா பக்கம் பேசுவது காரியத்துக்காக. இவர் படம் 2002 ல் பாபா வந்த போதுபாமக ஓட விட வில்லை. பழைய கோபம் காரணமாஅம்மா முதல்வரா இருந்தப்ப ஒன்னும் செய்யலை. படம் ஊத்தல். அப்ப தான் ரஜினிக்குதன் பலம் தெரிந்தது. அதில் இருந்துஆளுங்கட்சிக்கு ஜால்ரா போடுவார். படம் ஓடனும்ல். இல்ல திருட்டு விசிடி வரும்.

ரஜினி ஒரு கோழை. அவரை இன்னும் நம்பி கொண்டு இருக்கும்,அவர் ரசிகர்கள் ஏமாளிகள். இவர் குடும்பத்துக்குசொத்து சேர்க்க,நிறைய ரசிகர் குடும்பங்களை அழித்து கொண்டு இருக்கிறார். மக்கள் உஷார். அம்மா கூட நேருக்கு நேர் சண்டை போடும் தன்மை உள்ளவர். ரஜினி நிச்சயம் ஒரு கோழை.

இது இப்படி இருக்க ரஜனியின் மேடைப்பேச்சுக்கு விகடனில் விழுந்த கொமெண்ட்ஸ்


Kaarthikeyan Pandian9 Days ago
ஒரு விஷயம் கூர்ந்து கவனித்தால் புரியும். இந்த ரஜினியின் வாய் சவடால் எல்லாம் ஜெயலலிதா ஆட்சி செய்யும் போதுதான். கருணாநிதி ஊரை அடிச்சு உலையில் போட்டாலும் இவர் கருத்து எதுவும் சொல்லமாட்டார். பெருங்காய டப்பா...

Senthil9 Days ago
Rajni is an idiot...once again proved that he doesn't like tamilians...all he needs is the money from tamil people. It clearly shows Rajni still didn't understand that SriLankan tamilians could have been saved by Karunanidhi...hold on...thinking of it...i do agree that Karunanidhi will be remembered for NOT SAVING the tamilians...

SRINIVASAN9 Days ago
தலைவரு எப்போதும் இப்படித்தான் விட்டு தள்ளுங்க சப்ப மேட்டர் "ஜெ" கூட நன்றாக புரிந்து கொண்டிருப்பார் ரஜினியை ஆகையால் அவரே இதெல்லாம் பெரிதாக எடுத்து கொள்ள மாட்டார் என்றே நினைக்கிறேன்.எடுத்துக்கொள்ளவும் கூடாது மீடீயாக்களை கூட்டிவைத்து ரெட்டை இலைக்கு ஓட்டுப்போட்டு ஊர் முழுக்க காட்டியதை "ஜெ" மறந்திருக்க மாட்டார்.தாத்தாவுக்கு இந்த சந்தோசத்தையாவது கொடுப்போம் என்று கொடுத்திருக்கிறார்.ஆனா தலைவருக்கு நாக்குல சனி நின்னு விளையாடுகிறார் என்றே தோன்றுகிறது.

vinod9 Days ago
உண்மையிலேயே ரஜினி வென்றுவிட்டார் என கூட சொல்லலாம். அவருக்கு இப்பொழுது பப்ளிசிட்டி தேவை... படம் வர போவுது. சம்பாதிக்கணும் இல்ல.. இதுவும் ஒரு வழியான பிழைப்பே..அனேகமாக உள்ளே ஜெயாவிடம் இப்படி பேசப்போவதாக சொல்லிவிட்டு கூட பேசியிருக்கலாம்.

Ravi,Dallas, USA9 Days ago
டாய்லெட்டில் உட்கார்ந்துகொண்டு கடலையை கொறிப்பதுபோல இருக்கிறது ரஜினி பேசியவிதம்!!! நண்பர் என்று வந்துவிட்டால் நண்டு சிண்டெல்லாம் கூட கணக்கில் வரும்! அதை எங்கு எப்போது சொல்வது என்பதற்கெல்லாம் ஒரு நாசூக்கு இருக்கிறது!!! இந்த ஆளுக்கு தமிழே வராது! இங்கிதம் எப்படி வரும்?

yogeshwari9 Days ago
கதம் கதம் முடிஞ்சது முடிஞ்சுபோச்சு

selvaperia9 Days ago
ரஜினி பக்கத்தில் இருக்கும் ஜெயலலிதாவை(பாட்டியை) பார்க்க பாவமாத்தான் தெரியுது.

selvaperia9 Days ago
ரஜினி சொன்ன உண்மையைபொய்யாக்க எத்தனை பொய் சொல்கிறார்கள்.

jothi10 Days ago
கட்டுரை முழுக்க பிசினஸ் வேண்டி எழுதப்பட்டது,. இவ்வளவு பேசும் இந்த ரஜினி தமிழ் மக்களுக்கென என்ன செய்து விட்டார்?

கிராமத்தான்10 Days ago
ரசினி காந்த் எப்போவாவது "வாய்ஸ்" கொடுக்கிறார் என்றால் அவருடைய வியாபாரம் ஒன்று விரைவில் நடக்க இருக்கிறது என்பது அறிந்ததே. அது அவருடைய வழக்கமான "ஷ்டைல்"...என்ன படம் வரப்போகுதுயாராவது சொன்னால் தேவலை.

ஒரு (சினிமா)வியாபாரியிடமிருந்து நல்ல அரசியல் தலைமையை எதிர்பார்க்கும் தமிழக இளைஞர்கள் தான் பாத்து சூதானமா நடந்துக்கணும்.
Like 16 


இது தொடர்பாக அண்மையில் குங்குமத்தில் வந்த கட்டுரை

ரஜனி முன்பு பலபடங்களில் அரசியல்பற்றிக்கேட்கும்போது அதைப்பற்றி கொமெண்ட்ஸ் இல்லை என்று கூறுவார். அல்லது ஆண்டவன் அந்தக்கதாப்பாத்திரத்தைத்தந்தால் நான் அதை செய்வேன் என்பார்.ஆனால் அதிசயப்பிறவி,படையப்பா,குசேலன் போன்ற தனது பல படங்களில் ஒரு காட்சிவரும் யாராவது அரசிலுக்கு வருவாயா?(இதை ரஜனிக்காக அதிசயப்பிறவி படத்தில்கேட்ட சோவும் ரஜனியால் கேலிசெய்யப்பட்டார்)அல்லது நீ அரசியலுக்கு வந்துவிடுவாயோ என்று பலர் பயப்படுகின்றார்கள் என்று கூறுவார்கள்.அரசியலை கதைப்பது பிடிக்கவில்லை அல்லது விருப்பமில்லை என்றமுடிவுள்ளவராகவும் இதைக்கூறி தன் படத்திற்கு மார்க்கெட்டை ஏற்றாதவராகவும் ரசிகர்களை வீணாக உசுப்பேத்தாதவராகவும் இருந்தால் இப்படியான காட்சிகளை தவிர்த்திருக்கலாமே?இவருக்கு தெரியாமல் ரஜனியின் அனுமதியில்லாமல் இந்தக்காட்சிகள் அமைக்கப்பட்டவை என்பதை எவன் நம்புவான்.அத்துடன் தலைவராக இருப்பவருக்கு இருக்கவேண்டிய முக்கியமான ஆளுமைத்தகுதிகளுள்ஒன்று முடிவெடுப்பது இத்தனைவருடங்களாக கேட்கப்படும்கேள்விக்கு ஒரு முடிவையும் இவர் ஒழுங்காகவே கூறியதில்லை.மன்மோகன் சிங்க் பதில் கூறாமல் அறுக்கிறார் என்றால் இவரும் அதே வகைதானா?
ஒருவர் அழைத்தமேடையில் அழைத்தது பிடிக்கவில்லையாயின் போகாமல் விட்டிருக்கலாம் அல்லது அஜித் செய்தது மாதிரி தலைவி அவர்களே அரசியலை சினிமாவிற்குள்  நுழைக்காதீர்கள்என்று கூறியிருந்திருக்கலாம்.உங்களை விட சிறிய ஸ்ராருக்கு வந்ததைரியம் உங்களுக்கு இல்லையா தலைவாஅழைத்தவருக்கு எதிரானவரை அல்லது பிடிக்காதவரை அவர் மேடையில் இருக்கவே தூக்கிவைத்துப்பேசுதல் சபை நாகரீகமா?(ரஜனியின் ரசிகன் என்றகோணத்தை விட்டு வேறோரு கோணத்தில் நோக்கப்படவேண்டியவிடயமிது சினிமா உலகில் முடி சூடிய மன்னன் ரஜனிதான் ஆனால்....நிஜ உலகில்)

முடிவா தலைவரைக்கேட்கிறது என்னன்னா தலைவா உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்பு ரணகளமாகிடிச்சு அப்பாவி ரசிகர்களை ஏமாத்தாதீங்க...


ஆமா கோச்சடையான் எப்ப ரிலீஸு?

No comments:

Post a Comment