Saturday, 1 September 2012

ஹொலிவூட்டில் உங்களுக்குத்தெரியாதவைஇதற்கு என்ன தலைப்பிடுவது என்பதில் சிறிது குழம்பிவிட்டேன்.ஹொலிவூட் படங்களில் பொதுவாக ஹீரோ மறைத்துவைக்கப்பட்டிருக்கும் விடயத்தைக்கண்டுபிடிப்பதை பார்த்திருப்பீர்கள் .அப்படியான சந்தர்ப்பத்தில் சில தடயங்கள் கிடைக்கும்.அது இரகசியக்குறியீடாக இருக்கும்.அப்பொழுது ஹீரோயின் இது Steganography இது Morse Code என்று வாயில் வராததெல்லாவற்றையும் கூறுவார்.ஹீரோ இதில் என்ன குறிப்பிடப்பட்டிருக்கின்றது என்பதை அறிவதற்கு சில முறைகள் இருக்கின்றன என்று கூறி ஒரு துண்டை எடுத்து அதில் எழுத ஆரம்பிப்பார் வெட்டுவார் மீண்டும் எழுதுவார் யோ என்னையா நடந்துக்கிட்டிருக்கு?...அப்படியான இரகசியக்குறியீடுகள் பற்றிய பதிவுதான் இது.பிரபலமான இரகசியக்குறியீட்டு முறைகள்.எத்தனை வகையானவற்றைப்பயன்படுத்துகின்றார்கள்.எங்கு பயன்படுத்தப்பட்டது என்பது தொடர்பாக பதிவு நீள்கின்றது.குறிப்பிட்டுக்கூறக்கூடிய படமாக டாவின்சிக்கோட்டை குறிப்பிடலாம்.
டாவின்சி கோட் உலகை ஒரு உலுக்கு உலுப்பிய திரைப்படம்.டாவின்சியின் ஓவியங்கள் இப்படத்திற்கு சரியான பக்கபலமாக இருந்தன.டான் பிறவுனின் நூலை அடிப்படையாகக்கொண்டுதான் இப்படம் திரைப்படமாக்கப்பட்டது.டாவின்சியின் ஓவியத்திற்கு தனித்துவமான இயல்பிகளுண்டு.அவரின் ஓவியத்தை நாம் எந்தவரலாற்றுச்சம்பவத்துடனும் தொடர்புபடுத்தமுடியும்.ஒரு ஓவியத்தைப்பார்த்து அதில் ஏதாவது இரகசியக்குறியீடுகள் இருக்குமோ என்று சிந்தித்துக்கொண்டு பார்ப்போமேயானால் டாவிம்சியின் ஓவியங்கள் ஆம் இருக்கின்றன என்று கூறும்.
படத்தில் டொம் ஹான்ஸ் எப்படி இயேசுவின் குழந்தையை தேடிச்செல்கின்றாரென்று நினைவிருக்கின்றதா? சில கொலைகள் நடக்கும்.கொலை நடந்த இடங்களில் சில குறியீடுகள் கொலையுண்டவரினால் விடப்பட்டிருக்கும்.இதை ரொம்ஹான்ஸ் புரிந்துகொள்வார்.இக்குறியீடுகள் டொமான்ஸை அடுத்த இரகசியக்குறியீட்டுக்கு அழைத்துசெல்கின்றது.இப்படி நூலின்  நுனியைப்பிடித்து அப்படியே இறுதியில் சரியான இடத்திற்கு சென்றுவிடுவார்.
ஆனால் இதற்குக்குறியீடுகளைப்படிக்கத்தெரிந்திருக்கவேண்டும் அவை கொண்டிருக்கும் மறைபொருள் முடிச்சுக்களை அவிட்கத்தெரிந்திருக்கவேண்டும்.இவற்றில் பலதரப்பட்ட எழுத்துவிளையாட்டுக்கள் எண்விளையாட்டுக்கள் உள்ளன.அவற்றை குறியீடுகளாக அடையாளம் கண்டுகொள்ளவும் குறி நீக்கம் செய்யமுடிந்தால்தான் அவைகூறும் விடயங்களை உங்களால் புரிந்துகொள்ளமுடிந்து அடுத்த குறியீட்டை நோக்கி செல்லமுடியும்.அவ்வாறான மறைபொருட் குறியீட்கள் தொடர்பான விடயங்களைத்தான் பார்க்கப்போகின்றோம்.

Steganography(ஸ்டிகனோகிராபி)

இது சற்றுப்பழமையான முறை மறைந்திருக்கும் எழுத்துக்களை தன்வசம்கொண்டது.உதாரணமாக ஒரு பேப்பரில் எழுதப்பட்ட எழுத்தை மெழுகைக்கொண்டு மறைத்தல்.பல படங்களில் பார்த்திருப்பீர்கள் பேப்பறை சிறிதளவுவெப்பமேற்றும்போது எழுத்துக்கள் வெளியே தெரிய ஆரம்பிக்கும்.இதில் இன்னொரு முறைஇருக்கின்றது தகவலைக்கொண்டு செல்வதற்கென்று சிலர் தெரிவு செய்யப்பட்டிருப்பார்கள் அவர்களது வழுக்கைத்தலைமீது செய்திகளை குறியீடுகளாக வரைந்துவிடுவார்கள்.பின்னர் தலைமயிர் முளைக்கும்வரை காத்திருந்துவிட்டு செய்திகளை கொண்டு செல்வார் மெஸெஞ்சர்.நீண்டகாலத்திட்டங்களுக்கு இவ்வாறான செய்திப்பரிமாறல் மிக உதவியாக இருந்தன.இந்த முறையில் பயன்படுத்தப்படும் பொருட்கள் எல்லோருக்கும் வெளிப்படையாகத்தெரிந்த பொருட்களாக இருக்கும்.இங்கிலண்டில் பிரபலமான ஒரு முறை இருந்தது பத்திரிகை செய்தித்தாள்களை தமது இரகசிய செய்திகளை தமக்குள் பரிமாறுவதற்குப்பயன்படுத்தினார்கள்.எப்படித்தெரியுமா? செய்தித்தாள்களில் உள்ள சொற்களுக்கு கீழே  மிகசிறிய புள்ளிகள் இடப்பட்டிருக்கும்.அவ்வாறான புள்ளிகள் இடப்பட்ட வார்த்தைகளைத்தொகுத்தால் செய்தி வெளிப்பட்டுவிடும்.பியூட்டிபுல்  மைண்ட் என்றொரு திரைப்படம் வந்தது.அதில் கதா நாயகன் மன நிலை பாதிக்கப்பட்டவர் தான் ஒரு இரகசிய உளவாளி என்று நம்புபவர்.அவருக்கு செய்தித்தாள்களை வாசிக்கும்போது சில சில வரிகள்மட்டும் தனியே தெரிந்து தகவல்களாக மாறும் அதைப்போன்றதுதான் இது.சிலர் இதற்கு இன்விஸிபிள் மைகளைக்கூட பயன்படுத்துவார்கள் சில கெமிக்கல்களைக்கொண்ட மை சில இரசாயனத்தாக்கங்கள் மூலம் வெளியே தெரியவைக்கமுடியும்.

ROT1


இது குழந்தைகளிடம் பிரபலமான மறைகுறியீட்டுமுறை.கண்டுபிடிப்பத
ற்கும் இலகுவான முறை.அதாவது ஒரு எழுத்து எழுதப்பட்டிருக்குமாயின் அந்த எழுத்தின் அடுத்த எழுத்தை ஆங்கில நெடுங்கணக்கு முறைப்படி இடுதல்.இப்படி ஒரு ஒழுங்கான சொல்லை நேரே எழுதாமல் அடுத்துவரும் ஆங்கில எழுத்துக்களால் எழுதுதல்.BQQMF என்றொருவார்த்தை இருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள்.இதை நீங்கள் குறி நீக்கவேண்டுமாயின்  B இற்கு முன்னைய எழுத்து  A ,Qஇற்கு முன்னைய எழுத்து P,M இற்கு முன்னைய எழுத்துL, Fற்கு முன்னைய எழுத்து E.
அப்படியெனில் அதை ஒன்றாக எழுதினால் "APPLE". கண்டுபிடித்துவிட்டீர்கள்.
சோ நீங்கள் CAT ஐ  இம்முறையில் இரகசியக்குறியீடாக எழுதப்போகின்றீர்கள் என்றால் அடுத்தடுத்த எழுத்துக்களாக எழுதவேண்டும்.
C-D
A-E
T-U
DEU இதை யாராலும் வாசிக்கமுடியாது உங்களைத்தவிர.இம்முறையின் பெயர் ROT1 இதை நீங்கள்  தலைகீழாகவும் பயன்படுத்தலாம்.

Transposition இந்த முறையில் வார்த்தைகள் ஒழுங்கின்றி அமைக்கப்பட்டிருக்கும்.இவற்றை இதற்கென்றே அமைக்கப்பட்ட முறையின் படி குறி நீக்கம் செய்யவேண்டும்.உதாரணமாக “all the better to see you with” என்பது “lla eht retteb to ees joy htiw" என்று மாறியிருக்கும்.இன்னொரு முறை இருக்கின்றது ஒவ்வொரு சோடி எழுத்துக்களையும் இடம்மாற்றி எழுதல் இதே பாணியில் மேற்கூறிய வசனத்தை எழுதினால் la tl eh eb tt re to es ye uo iw ht என்று வரும்.அதாவது
all the better to see you with என்பதை
al lt he be tt er to se ey ou wi th இப்படி சோடி சோடியாகப்பிரித்து பின்னர்
 la tl eh eb tt re to es ye uo iw ht இப்படி வழம்மாற்றி எழுதல்.
இது ஏதோ விளையாடுத்தனமாகத்தெரிகின்றதா? முதலாம் உலகப்போரிலும் அமெரிக்க சிவில் போரிலும் இந்தமுறையில்தான் முக்கிய தகவல்கள் பரிமாறப்பட்டன.மேலே கூறியது ஒரு முறைதான் ஆனால் கடினமான பல முறைகள் உள்ளன்.இவற்றை நீங்களே உருவாக்கலாம் இப்படி எழுத்தை மாற்றியபின் 2 சோடி எழுத்துக்களுக்கிடையில் ஒரு எழுத்தை இடுதல் அல்லது இடையில் தெளிவான வசனங்களை இடுதல் இப்படி நீங்களே புதிது புதிதாக உருவாக்கலாம்.

Morse Code

பெயரில் குறியீடு என்று இருப்பினும் இது ஒரு மறைகுறியீடாகும்.ஆங்கிலத்தின் 26 எழுத்துக்களுக்கும் 0 தொடக்கம் 9வரையான இலக்கத்திற்கும் சில குறியீடுகளுக்கும் இம்முறையில் சில கோடுகளாக குறிப்பிடப்படும்.மேலே படத்தைப்பார்க்க.பெரிய சிறிய கோடுகளாக இருக்கும்.A  என்பது "._ "  .B என்பது "_ .." என்றவகையில் குறியீடுகளாக இடப்படும்.இதைக்கண்டுபிடித்தவர் Samuel Morse.வெகு தொலைவில் இருக்கும் துருப்புக்களுக்கு செய்தி அனுப்புவதற்காக இம்முறைபயன்படுத்தப்பட்டது.செய்தி மின் கம்பிகளினூடாகத்தான் செல்லும் தொலைவில் உள்ள செய்திபெறவேண்டிய இடத்தில் றிசீவர் இருக்கும்.இங்கிருந்து மின்சாரத்தை துண்டித்து துண்டித்து அனுப்புவார்கள் துண்டிக்கப்படும் நேரத்திற்கேற்ப கோடுகளாக ,புள்ளிகளாக ரிசீவர்கள் உணர்ந்துகொள்ளும்.இதை பின்னர்  குறினீக்கம் செய்வார்கள்.செய்தியைஇடையில் யாராவது திருடினால் செய்தி இப்படித்தான் இருக்கும்.
"•–• •- •-• •- -••• • •-•• •-•• ••- –" செத்தாண்டா சேகரு
நீங்கள் ஆங்கிலத்தில் கொடுக்கும் விடயங்களை  மோர்ஸ் கோட்டாக மாற்றித்தரும் இணையத்தளம் இருக்கின்றது இங்கே கிளிக்.
Caesar Shift Cipher


இது சீசரினால் உருவாக்கப்பட்டது.ஆரம்பத்தில் ROT1  என்ற முறையை அவதானித்தோம் அல்லவா அம்முறையையில் உருவாக்கிய செய்திகளை இதன் மூலம் குறி நீக்கம் செய்துகொள்ளலாம்.ROT1 இல் பல முறைகள் இருக்கின்ற அவ்வாறான முறைகளுக்கு இதைப்பயன்படுத்திக்கொள்ளலாம்.உதாரணமாக A எனறஎழுத்தை G என்ற எழுத்தாக இடுவோமேயானால் கருவியை கவனியுங்கள் அது 2 தளங்களைக்கொண்டது 2 ம் ஒன்றையொன்று தடைசெய்யாது சுற்றக்கூடியது எனவே A எனறஎழுத்துக்கு நேரே G என்ற எழுத்தை கொண்டுவந்து விட்டுவிடலாம்.உடனே இக்கருவி B என்ற எழுத்துக்கு நேரே H ஐயும்C என்ற எழுத்துக்கு நேரே I ஐயும் காட்டும்.இப்படி பல குறியீட்டுமுறைகளை அறிவதற்கு இது பயன்படும்.

simple substitution 
இதுவும் ROT1 யைப்போன்றமுறைதான்.ஆங்கில் நெடுங்கணக்கு முறையை மாற்றுவதன் மூலம் உருவாக்கப்படுகின்றது.ஆனால் சாதாரணமாக எழுத்துக்களை மாற்றி  உருவாக்கப்படும் முறை அல்ல இது.இம்முறைக்கு ஒரு கீவேர்ட் ஒன்றை வைத்திருப்பார்கள் இது ஒவ்வொருநபர்களுக்குமேற்ப வேறுபடும்.எனவே இந்த  கீ வேர்ட் தெரிந்தால் மட்டுமே தகவலை வாசிக்க முடியும்."zebras" என்ற கீ வேர்ட் இருக்கின்றது என் வைத்துக்கொள்வோம்.இதை எப்படிப்பயன்படுத்துவது?
zebras என்ற எழுத்துக்களுக்குப்பின்னால் ஏனைய ஆங்கில எழுத்துக்களை நெடுங்கணக்கு ஓர்டறின்படி எழுதவேண்டும்.ஆனால் "zebras" இல் உள்ள எழுத்துக்களை விட்டுவிடவேண்டும்.

ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ இது சாதாரணமான் ஓர்டர்
ZEBRASCDFGHIJKLMNOPQTUVWXY இதைப்பாருங்கள் ZEBRAS என்ற எழுத்துக்களை விட்டுவிட்டு எழுதப்பட்டுள்ளது.

flee at once. we are discovered! என்ற வசனத்தை இரகசியமாக அனுப்பவேண்டும் என வைத்துக்கொள்வோம்.
அது SIAA ZQ LKBA. VA ZOA RFPBLUAOAR! ஆக மாற்றி அனுப்பப்படும்.


ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ (1)

ZEBRASCDFGHIJKLMNOPQTUVWXY(2)
இதில் ஒரே நிறத்தில் காட்டப்பட்ட எழுத்துக்களை கவனிக்க 1 ஒழுங்கான் ஓடறில் எழுதப்பட்டுள்ளது.

2 கீவேர்ட்டுடன் எழுதப்பட்டுள்ளது. நீங்கள் அனுப்பவேண்டிய தகவலை ஆங்கிலத்தால் எழுதிவிட்டு
ஒழுங்காக எழுதப்பட்டதற்கு (1)நேரே கீழே உள்ள(2) எழுத்துக்களை அவதானித்து எழுதவேண்டும்.

VENKKAYAM  Vற்கு நேரே கீழே உள்ள எழுத்து T ,ற்கு நேரே கீழே உள்ள எழுத்து A,ற்கு நேரே கீழே உள்ள எழுத்து K ஆகவே VEN என்பதை TAK  என எழுதவேண்டும். கீவேர்ட்கள் மாறும் போது எழுத்துக்கள் மாறும்.


தொடரும்......

No comments:

Post a Comment