Wednesday, 12 September 2012

9/11விமானத்தின் உள்ளே நடந்தது என்ன?-02


முதலாவது பதிவில் போயிங்க் 767 விமானம் கடத்தப்பட்டவிதம் அங்கிருந்த விமானப்பணியாளர்கள் மற்றும் பயணிகளால் விமானக்கட்டுப்பாட்டு அறை மற்றும் உறவினர்களுக்கு அனுப்பப்பட்டதகவல்களைப்பார்த்தோம்.

முதல்பதிவு
இந்தப்பகுதில் கடத்தப்பட்ட அடுத்தவிமானம் யுனைட்டெட் 175 இல் என்ன நடந்தது என்று பார்க்க இருக்கின்றோம்.
விமானம்மோதுவற்கு சில நொடிகள் முன்னதாக எடுக்கப்பட்டது

விமானம்போஸ்டனில் இருந்து லொஸ்ஏஞ்சல்ஸுக்கு புறப்பட்டது.காலை 8.14 இற்கு லோகன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது.கடத்தல்காரர்களுடன் சேர்த்து மொத்தமாக 56பேர் பிரயாணம் செய்தார்கள். 8.33 ற்கு விமானம் தான் அடையவேண்டிய இலக்கான 31 000 அடியை அடைந்தது.இந்த நேரத்தில் போயுங்க் 767 விமானம் கடத்தப்பட்டிருந்தது.விமானத்திற்கு கப்டனாக இருந்தவர் விக்டர் இவருக்கு 8.42 ற்கு விமானம் ஒன்று கடத்தப்பட்டதாக அரைகுறையாக ஒரு செய்தியொன்றுவந்தது.ஆனால் இந்த செய்தி சரியானதா என்று உறுதிப்படுத்த அவருக்கு நேரம்கிடைத்திருக்கவில்லை.  யுனைட்டெட் 175  விமானத்தைக்கடத்திய 5 தீவிரவாதிகளின்பெயர்கள் Marwan al-Shehhi,  Fayez Banihammad,  Hamza al-Ghamdi, Ahmed al-GhamdiMohand al-Shehri.இவர்களிடம் கூர்மையான கத்திகள் இருந்திருக்கின்றன.மண்டையை உடைக்கக்கூடியரூலர் ஒன்றையும் வைத்திருந்திருக்கின்றார்கள்.யுனைட்டெட் விமானத்தில் நடந்ததுபோலவே விமானத்தை தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்கள்.விமானம்பணியாளர்களைத்தாக்கிவிட்டு கப்டனை கொலைசெய்துவிட்டு விமானத்தைக்கைப்பற்றினார்கள்.

இவ்விமானம் கட்த்தப்பட்டவிபரம் கட்டுப்பாட்டுஅறைக்கு 8.47 ற்கு தெரியவந்துவிட்டது.காரணம் விமானத்தை இயக்கிய தீவிரவாதிக்கு தொழில் நுட்ப அறிவுபோதாமல் இருந்ததால் விமானத்தின் பயணத்திசையை அடிக்கடி மாற்றிக்கொண்டிருந்தான்.8.51ற்கு விமானத்தில் உயரம் தாறுமாறாக குறையத்தொடங்கியது. நியூயோர்க் கட்டுப்பாட்டு அறையில் இருப்போர் பதறியடித்துக்கொண்டு விமானத்துடன் தொடர்புகொள்ள முயற்சி செய்தார்கள் ஆனால் பலன் இல்லை.


இது நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது விமானத்தில் பின்புறம் இருந்த பயணியான பீட்டர் ஹான்ஸன் இரகசியமாக தனது கைபேசியின் உதவியுடன் தனதுவீட்டிற்கு தொடர்புகொண்டார்.அவரது தந்தை லீ ஹான்ஸனுடன் தொடர்பு கிடைத்தது.பேசினார்இந்த செய்தியை லீ காவல்துறைக்கு அளித்த வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.அந்த செய்தி இதுதான்
“அவர்கள் காக்பிட்டை கைப்பற்றிவிட்டார்கள் என்று நினைக்கின்றேன்.ஒரு விமானப்பணிபெண் கடுமையாகத்தாக்கப்பட்டுள்ளார்.ஒரு சில பயணிகள் கொல்லப்பட்டிருக்கலாம்.இது ஃப்லைட் 175.பொஸ்டனில் இருந்து லொஸ் ஏஞ்சல்ஸுக்கு போய்க்கொண்டிருக்கும் விமானம்.யுனைட்டெட் எயார்லைன்ஸுக்கு தொடர்பை ஏற்படுத்தி உடனடியாக விடயத்தைக்கூறுங்கள் என்று கூறியிருக்கிறார் பீட்டர் ஹான்ஸன்.
8.52ற்கு விமான ஊழியர் ஒருவர் சான்ஸ்பிரான்ஸிஸ்கோவில் உள்ள ஒரு விமானக்கம்பனிக்கு தொடர்புகொண்டு 2 விமானிகள் கொல்லப்பட்டதையும் ஒரு பெண் தாக்கப்பட்டதையும் உறுதிப்படுத்தினார்.
 லீ ஹான்ஸன்

8.58 ற்கு விமானம்  நியூயோர்க் நகரை நோக்கித்திருப்பப்பட்டது.

8.59ற்கு ப்ரையின் டேவிட் தொலைபேசிமூலம் தன் மனைவியை தொடர்புகொள்ள முயன்றார் வீட்டில் யாரும் இல்லை.பின்னர் தன் தாயாருக்கு எடுத்தார்.அவர் எடுக்கவே விமானம் கடத்தப்பட்ட விடயத்தைக்கூறினார் டேவிட்.அத்துடன் சில பயணிகள் காக்பிட்டை முற்றுகையிட்டு தீவிரவாதிகளை வெளியேற்றமுடியுமா?என்று யோசிப்பதாக கூறினார்.

9 மணிக்கு லீ ஹான்சனுக்கு மீண்டும் அழைப்புவந்தது.
“நிலவரம் மோசமாகிக்கொண்டிருக்கிறது அப்பா.அவர்கள் கத்திகள் தடிகளை வைத்திருக்கின்றார்கள்.வெடிகுண்டுவைத்திருப்பதாக கூறுகின்றார்கள்.விமானம் தாறுமாறாகப்பறக்கின்றது.பைலட் விமானத்தை ஓட்டவில்லை.மிகவும் தாழ்வாகப்பறக்கின்றது.எதிலோ மோதப்போகின்றார்கள் என்று நினைக்கின்றேன்.ஆனால் கவலைப்படாதீர்கள் எப்படியாவது....ஓ..காட்.......ஓமை காட்...ஓ மைகாட்..
அப்படியே முறிந்தது தொலைதொடர்பு அந்த நேரத்தில் பின்னார் ஒரு பெண் கதறி கிரீச்சிடும் குரல் கேட்டதாக லீ கூறினார்.உடனே லீ  தொலைக்காட்சியை ஓன் செய்து ஏதாவது செய்திகள் வருகின்றதா என்று பார்த்தார்.
இரண்டாவது விமானம் வர்த்தக மையக்கட்டிடத்தில் அப்பொழுதுதான் மோதிக்கொண்டிருந்தது நேரம் 9.03.

கடத்தப்பட்ட அடுத்த விமானம் அமெரிக்கன் 77

அமெரிக்க இராணுவதலைமையகமான பெண்டகன்மீது தாக்குதல் நடத்தப்பயன்படுத்தப்பட்ட விமானம் இதுதான்.வாசிங்க்டன் டல்லஸ் விமான நிலையத்தில் இருந்து லொஸ் ஏஞ்சல்ஸுக்கு புறப்பட்ட விமானம் இதுதான்.இதில் 58 பயணிகள் இருந்தார்கள்.அத்துடன் 2 விமானிகளும் இருந்தார்கள்.
காலை 8.20ற்கு புறப்படத்தொடங்கிய விமானம் 8.46 ற்கு 35 000 அடியில் பறந்துகொண்டிருந்தது.8.50 ற்கு கட்டுப்பாட்டு நிலையத்திற்கு வந்த தகவல்தான் இறுதித்தகவல்.8.51இல் இருந்து 8.54 ற்குள் விமானம் கடத்தப்பட்டிருக்கின்றது.
இந்த விமானத்தில் இருந்த கடத்தல் காரர்களும் ஏனையவிமானத்தில் உள்ள தீவிரவாதிகளைப்போல் கத்திகளையும் குண்டு தம்மிடம் இருப்பதாக பயப்படுத்தியும் விமானத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்கின்றார்கள்.
ஆனால் இந்தவிமானத்தில் வித்தியாசமான ஒரு சம்பவம் நடந்தது பைலட்டே விமானம் கடத்தப்பட்டுள்ளது என பயணிகளுக்கு அறிவித்துள்ளார்.(இது எவ்வாறு சாத்தியமானது.உள்ளே புகுந்தவுடன் பைலட்களை கொல்வதுதான் வழக்கம் 2 விமானங்களிலும் இதுதான் நடந்தது.)
8.54 ற்கு விமானம் தன் பாதையில் இருந்துவிலகத்தொடங்கியது.2 நிமிடத்தில் விமானத்துடனான தொடர்பு முற்றாக துண்டிக்கப்பட்டது.ராடர் தொடர்புகூட சாத்தியப்படவில்லை.3 விமானங்கள் கடத்தப்பட்டன அவற்றில் 2 அமெரிக்கன் ஏர்லைன்ஸினுடையது.தீவிரத்தை உணர்ந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் வைஸ்பிரஸிடன்ற் ஜெரார்ட் ஆர்பே அன்று புறப்பட இருந்த அனைத்து அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானங்களையும் நிறுத்திவிட்டார்.

மற்றையவிமானத்தில் நடைபெற்றதுபோலவே இந்தவிமானத்தில் இருந்த பயணிகளும் தொலைபேசியின் உதவியுடன் தரைக்கு தொடர்புகொண்டார்கள்.

பார்ப்பரா ஒல்ஸன் என்றபயணி இவர் அமெரிக்க ஜெனரல் டெட் ஒல்ஸனின் மனைவி.இவர் தனது கணவரை தொலைபேசிமூலம் தொடர்புகொண்டார்.பதற்றமுடன் நடந்தவற்றைக்கூறினார் ஒல்ஸன்.ஆனால் டெட் ஒல்ஸனுக்கு அந்தவிடயம் ஏற்கனவே தெரிந்திருந்தது.மனதை மிகுந்த சிரமத்துடன் திடப்படுத்திக்கொண்ட அவர் தன் மனைவியிடம் ஏற்கனவே 2 விமானங்கள் கடத்தப்பட்டதையும் அவை வர்த்தக கட்டடங்கள் மீது மோதிய விபரத்தையும் தேசம் மிகப்பெரும் அதிர்ச்சியில் உறைந்திருப்பதையும் தெரிவித்தார்.
பார்ப்பரா மிகுந்த அதிர்ச்சியடைந்தாலும் விடயத்தை விமானத்தில் உள்ள மற்றையவர்களுக்கு தெரிவிக்கவில்லை.மற்றவர்களை கலவரப்படுத்தவேண்டாம் என்று நினைத்திருக்கின்றார்.

அப்போது மணி9.29 விமானம் 7000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தது.தாங்கள் மிகவும் தாழ்வாகப்பறந்துகொண்டிருப்பதாக பார்ப்பரா கூறினார். பெண்டகன் கட்டிடத்திற்கு மேற்கே 38 மைல் தொலைவில் விமானம் வந்துகொண்டிருந்தது.ஒழுங்காக சென்றவிமானம் திடீர் என்று 330 பாகை கோணத்தில் திரும்பியது.அபொழுது 2200 அடி உயரத்திற்கு விமானம் மேலும் தன் உயரத்தைக்குறைத்துக்கொண்டது.கடத்தல்காரர்கள் விமானத்தின் வேகவிசையை மிகவும் அதிகமாக வைத்திருந்தார்கள்.
9.37 விமானம் பெண்டகன் கட்டடத்தின் மீது மோதியது.விமானத்தில் இருந்த அனைவரும் நொடிப்பொழுதில் மரணமடைந்தார்கள்.


No comments:

Post a Comment