Monday, 10 September 2012

9/11 உலகவர்த்தகமையக்கட்டிடங்கள் உடைக்கப்பட்டதினம்-01செப்ரெம்பர் 11,2001 நான்தான் உலகின் அசைக்கமுடியாத வல்லரசு என்று மார்தட்டிக்கொண்டிருந்த அமெரிக்காவை கதறவைத்த நாள்.அமெரிக்காவின் உலகவர்த்தக மையக்கட்டங்கள் அல்கொய்தா இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகளினால் தரைமட்டமாக்கப்பட்டன.உலகில் இருக்கும் அனைத்துமக்களுக்கும் முக்கியமாக அமெரிக்கவாழ்மக்களுக்கு இன்றளவுக்கும் பேரதிர்ச்சி நிறைந்த சம்பவமாக ஆகியது இன் நிகழ்வு.இன்றுடன் 11 வருடங்கள் நிறைவடைந்துவிட்டன.இத்தாக்குதல் எவ்வாறு நடைபெற்றது?யார்?யார் இதில் பங்குபற்றினார்கள்?என்பது தொடர்பாக நீள்கின்றது இப்பதிவு.
ஒட்டுமொத்தமாக 3000  நபர்களை இந்த தற்கொலைத்தாக்குதல் பலிவாங்கியது.அதில் 2752 நபர்கள் வர்த்தக மையக்கட்டடத்தில் இருந்தவர்கள்.60 காவல்துறையினர் காணாமல்போனார்கள்.6000 நபர்களுக்கு பெருங்காயங்கள் ஏற்பட்டன.10000 நபர்கள் சிறிய காயங்களுடன் தப்பித்தார்கள்.26% ஆன அமெரிக்கர்களின் மனதில் இன்றும் இந்தத்தாக்குதல் நினைவில் இருந்துகொண்டே இருக்கின்றது.50% ஆன அமெரிக்க மக்கள் தீவிரவாதத்தாக்குதல் ஏதாவது நடைபெற்றுவிடுமோ என்றபயத்துடனே வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள்.3051 அமெரிக்க சிறுவர்கள் தமது ஒரு பெற்றோரையாவது இந்த சம்பவத்தால் இழந்தார்கள்.2001 இல் விடுமுறைக்காக விமானப்பயணத்தை தெரிவு செய்த 1.4 மில்லியன் மக்கள்  பயணத்தை கார்ப்பயணமாக மாற்றிக்கொண்டார்கள்.மொத்தமாக 19,858 உடற்பகுதிகள் இடிபாடுகளில் இருந்து கண்டெடுக்கப்பட்டன.289 உடல்களே ஓரளவிற்கு அடையாளப்படுத்தக்கூடியவிதத்தில் கண்டுபிடிக்கப்பட்டன.

அன்று செவ்வாய்க்கிழமை ஜானாதிபதி புஸ் அதிகாலை தனது நடைபயிற்சிக்காக சென்றுகொண்டிருந்தார்.அன்றைய நாள் நிச்சயமாக அமெரிக்காவிற்கு நல்ல நாளாக இல்லை.அமெரிக்கா இது வரை தீவிரவாதத்தாக்குதல்களை அதிகமாக அமெரிக்காவிற்கு வெளியேதான் சந்தித்திருக்கின்றது.ஓகஸ்ட் 7 ,1998 இல் கென்யாவிலும்,தான்சானியாவிலும் உள்ள அமெரிக்க தூதரகங்கள் அல்கொய்தா தற்கொலைப்படையின் வெடிமருந்து நிரப்பிய ரக்குடன் சென்று தாக்குதல் நடத்தின.ஆனால் ஒரு தீவிரவாதத்தாக்குதல் அதுவும் இப்படியான வித்தியாசமான முறையில் நடைபெறும் என்று யாரும் கனவில் கூட நினைத்திருக்கவில்லை.அமெரிகவரலாற்றில் விமானத்தையே தற்கொலைக்கருவையாக பயன்படுத்தி எந்த தாக்குதலும் இதற்கு முன் நடந்ததில்லை.அப்படியொரு தாக்குதல் முயற்சி நடந்தால் என்ன செய்வது?என்ன முன்னேற்பாடு செய்வது?விமான ஊளியர்களுக்கு இப்படியான சந்தர்ப்பத்தில் எவ்வாறு தம்மையும் விமானத்தையும் பாதுகாத்துக்கொள்வது தொடர்பான பயிற்சிகள்,விமான கட்டுப்பட்டு நிலையம் இந்த சந்தர்ப்பத்தில் என்ன செய்யவேண்டும் என்ற எந்த விடயமுமே அவர்களுக்கு தெரிந்திருக்கவேண்டியிருந்ததில்லை.தெரியவில்லை ஏனெனில் இதுதான் முதல் தடவை.அமெரிக்க பொருளாதாரத்தை குறிவைத்து தூர நோக்குடன் நடத்தப்பட்ட தாக்குதல் உண்மையில் வெற்றியடைந்துவிட்டது.
மொத்தமாக 4 விமானங்கள் கடத்தப்பட்டன.இவை உலகவர்த்தகமையக்கட்டங்கள் மீதும் இராணுவத்தலைமையகமாக பெண்டகன் மீதும் தாக்குதல்களை வெற்றிகரமக நடத்தின.ஒரே ஒரு விமானம் மட்டும் பென்சில்வேனியாவில் விழுந்து நொருங்கியது.ஆனால் இதுதான் வர்த்தக மையக்கட்டங்கள் மீது நடத்தப்பட்ட முதலாவது தாக்குதல் அல்ல.1993 பெப்ரவரி 26 இலும் ஒரு குண்டுவெடிப்புத்தாக்குதல் நடைபெற்றது.ஆனால் பெருத்த சேதம் எதுவும் ஏற்படவில்லை.பின்னர் அச்சம்பவத்துடன் தொடர்புடைய தீவிரவாத இயக்கத்தினரை ஹெலிஹொப்டரில் அழைத்துச்செல்லும் போது வர்த்தகமையக்கட்டிடம் வந்ததும் கோபமடைந்த அதிகாரி ஒருவர் ஒரு தீவிரவாதியை வெளியே தள்ளி வைத்திருந்து கொண்டு" பார் நீங்கள் தகர்க்க நினைத்த கட்டிடம் அப்படியேதான் நின்றுகொண்டிருக்கின்றது"என்று கர்ச்சித்தார்.

1993 தாக்குதலுடன் தொடர்புடைய தீவிரவாதிகள்
9/11/2001 தாக்குதலில் மொத்தமாக 19 தீவிரவாதிகள் பங்குபற்றினார்கள்.இவர்கள் அமெரிக்காவிற்கு தாக்குதல் நடைபெற்ற தினத்திற்கு ஒருவருடத்திற்கு முன்பே சிறு சிறு குழுக்களாக அமெரிக்காவிற்கி வந்து குடியேறியவர்கள்.பின்னர் அங்கு குழுவாக இணைந்து திட்டத்தை அமுல்படுத்த ஆலோசனைகள் இடம்பெற்றன.இவர்கள் ஒருவருடமாக அமெரிக்காவில் திட்டம் தீட்டிக்கொண்டிருக்க சி.பி.ஐயும் எப்.பி.ஐ யும் என்ன புடுங்கிக்கொண்டிருந்தார்கள் என்பதை பின்னர் பார்க்கலாம்.அமெரிகக் எப்படி இவர்களை கோட்டை விட்டது என்பதையும் பின்னர் பார்க்கலாம்.

ஒவ்வொரு விமானமும் எவ்வாறுகடத்தப்பட்டன?விமானத்தினுள்ளே என்னென்ன சம்பவங்கள் நடைபெற்றன?என்பவற்றை தொடருவோம்.

முதலாவதாக கடத்தப்பட்டவிமானம்  Boeing 767.போஸ்ட்டனில் இருந்து லோஸ் ஏஞ்சல்ஸ்ஸுக்கு முதலாவதாக சென்றவிமானம் இதுதான்.
இதில் மொத்தமாக 5 தீவிரவாதிகள் பயணிகளாக விமானத்தினுள் சென்றார்கள்.


பொஸ்ரனில் இருந்து அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானம் லொஸ் ஏஞ்சல்ஸை நோக்கிப்புறப்பட்டது.கடத்தல்கார்ர்களுடன் மொத்தமாக 81 பயணிகள் 9 விமான சிப்பந்திகள் இருந்தார்கள்.விமானம் மேலே சென்றுகொண்டிருந்தபோது 35 000 அடி உயரத்தில் பறக்குமாறு கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்து உத்தரவு வந்தது.ஆனால் விமானிகளிடமிருந்து பதில் இல்லை.விமானம் புறப்பட்டு 16 ஆவது நிமிடம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது.8.14 விமானத்தின் முதல் வகுப்பில் 2வது வரிசையில் இருந்த அல்ஷெரி,வாலித் இருவரும் விமானப்பணியாளர்களைத்தாக்கிவிட்டு எழுந்தார்கள்.(விமானத்தினுள் நடந்த இவ்விடயங்கள் விமனப்பணிப்பெண்களால் இரகசியமாக உடனுக்குடன் கட்டுப்பாட்டு நிலையத்திற்கு தெரிவித்துக்கொண்டிருந்தார்கள்.இதேபோல் ஏனைய 4 விமானங்களிலும் பயணிகள்,விமானசிப்பந்திகள் கட்டுப்பாட்டுஅறை,தமது உறவினர்களிடம் தெரிவித்த தகவல்களைத்திரட்டியே விமானத்தில் என்ன நடந்தது என்று அறைக்கை சமர்ப்பிக்க முடிந்தது.)
விமானிகள் இருக்கும் காக்பிட் அறைக்குள் தீவிரவாதிகள் நுழைந்துள்ளார்கள்.வழக்கமாக விமானம்புறப்படும்போது இவ் அறையைப்பூட்டிவிடுவார்கள்.யாரும் இலகுவில் உள்ளே நுழையமுடியாது.எப்படி இவர்கள் உள்ளே நுழைந்தார்கள் என்று சரிவரத்தெரியவில்லை.உடைத்தோ பணிப்பெண்களை மிரட்டியோ உள்ளே புகுந்திருக்கலாம்.கடத்தல்காரர்கள் ஐவரில் முகம்மது ஆட்டாவுக்கு மட்டுமே விமானம் ஓட்டத்தெரியும்.ஆட்டா விமானத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஏனையோர் பயணிகளைக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்கள்.லெவின் என்ற முன்னாள் இராணுவ அதிகாரி இவர்களில் ஒருவரை தாக்க முயற்சி செய்தார்.ஆனால் அவரது இருக்கைக்கு பின்னாலேயே ஒரு தீவிரவாதி இருந்த்து அவருக்கு தெரிந்திருக்கவில்லை.அவனால் லெவின் தடுக்கப்பட்டார்.

பயணிகள் ஆரம்பத்தில் இவர்களுக்கு எதிர்ப்புதெரிவித்தார்கள்.எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார்கள்.ஆனால் கடத்தல்கார்ரகள் தம்மிடம் வெடிகுண்டு  இருப்பதாக கூறிபயமுறுத்தி பணியவைத்தார்கள்.உண்மையில் அவர்களிடம் எந்தவெடிகுண்டும் இருக்கவில்லை.பயணிகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு ஸ்பிரேக்களைப்பயன்படுத்தினார்கள்.மிளகு தூள்களையும் தீவிரவாதிகள் பயன்படுத்தியுள்ளார்கள்.பயணிகள் பலருக்கு இங்கு என்ன நடைபெறுகின்றது என்பதையே புரிந்துகொள்ளமுடியாத நிலையில் இருந்தார்கள் அவ்வளவு அதிர்ச்சி.

கடத்தப்பட்ட விமானத்தின் பயணிகளினால் தரைக்கு இரகசியமாக அனுப்பப்பட்ட செய்திகள்.
பெட்டி ஓங்க்

பெட்டி ஓங்க் என்ற விமானப்பணிப்பெண்ணினால் அனுப்பப்பட்ட செய்திகள்.இவர் வடகரோலினாவில் உள்ள அமெரிக்கன் எயார்லைன்ஸ்ஸுக்கு தொடர்புகொண்டு பின்வரும்தகவல்களைக்கூறினார்.
8.19 ற்கு தகவல் வழங்கப்பட்டது.
“பிஸினஸ் வகுப்பில் ஏதோ நடக்கின்றது.விஷப்புகைபோன்ற ஏதோ பரவவிடப்பட்டிருக்கின்றது.எங்களால் சரிவர சுவாசிக்கமுடியவில்லை விமானம் கட்த்தப்பட்டிருக்கின்றது என்று நினைக்கின்றேன்.எந்த விடயமும் சரிவரத்தெரியவில்லை.ஊழியர்கள் தாக்கப்பட்டுள்ளார்கள்.”
கரோலினாவில் உள்ள ஊழியர் இதைக்கேட்டிபதறிப்போய் ரெக்ஸ்ஸஸில் உள்ள ஏர்லைன்ஸ் ஒபிறேசன் சென்ரருக்கு விடயத்தைக்கூற.அவர்கள் அதை எயார் ட்ரபிக் கொன்றோலிற்கு கூறினார்கள்.ஆனால் எயார் ட்ரபிக் கொன்றோலிற்கு இவ்விடயம் முன்னமே தெரிந்திருந்தது.
விமானத்தின் காக்பிட்டுக்குள் அட்டா நுழைந்தசமயம் பயணிகளை எச்சரிப்பதற்காக ஒலிபெருக்கி ஆளியை இயக்கியிருக்கின்றான்.தவறுதலாக 1,2 ஆளிகளை சேர்த்து இயக்கிவிட உள்ளே இருந்த மைக்குரோ போன் உயிர்பெற்றுவிட்டது.இதனால் ஆட்டா பயணிகளை “யாரும் நகராதீர்கள் நகரமுற்பட்டால் விமானத்திற்கும் உங்களுக்கும் சேர்த்து ஆபத்து ஏற்படும்”என்று எச்சரித்தது தெளிவாக கட்டுப்பாட்டு நிலையத்திற்கு கேட்டுவிட்டது.
8.26ற்குப்பேசிய ஓங்க் விமானம் தாறுமாறாகப்பறப்பதாக கூறினார்.
8.27 ற்குப்பேசிய ஓங்க் விமானம் தன் திசையை மாற்றி தெற்கு நோக்கி பறப்பதாக கூறினார்.
8.38 க்கு தொடர்புகொண்ட ஓங்க் கடத்தல்கார்ர்கள் எல்லோரும் மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்தவர்கள்.ஒருனது ஆங்கிலம் மிகமோசமாக இருக்கின்றது மற்றையவன் நன்றாக ஆங்கிலம் கதைக்கின்றான்.தொடர்பு திடீர் என்று துண்டிக்கப்பட்டு விட்டது.மீண்டும் முயற்சி செய்தும் தொடர்பு கிடைக்கவில்லை.

பெட்டி ஓங்க்கின் தகவல்ஸ்வினி என்ற இன்னொரு ஊழியர் கட்டுப்பாட்டு நிலையத்திற்கு செய்திகளை வழங்கினார்.

8.41 ற்கு ஸ்வீனி பேசியது விமானம் கடத்தப்பட்டிருக்கின்றது என்பது தெளிவாக தெரிகின்றது.2 பயணிகள் தாக்கப்பட்டுள்ளார்கள்.ஒருவரின் தொண்டையில் பலமான காயம் ஏற்பட்டுள்ளது.அங்கே வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கின்றது.பயணிகள் பலருக்கு இங்கே என்ன நடக்கின்றது என்பது புரிந்திருக்கவில்லை.முதல் வகுப்பில் பயணி யாருக்கோ உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது.அவருக்கு முதலுதவி அளிப்பதற்காகவே ஓடித்திரிகின்றார்கள் என்று நம்பிக்கொண்டிருக்கின்றார்கள்.
அடுத்த 3 நிமிடத்தில்  ஸ்வீனி பதற்றம் நிறைந்தகுரலில் “அபாயம் விமானம் மிகவும் தாழப்பறக்கின்றது.நிச்சயம் இது விபரீதத்தில்தான் முடியப்போகின்றது.
கொஞ்சம் முயற்சி செய்து நீங்கள் எங்கே பறந்துகொண்டிருக்கின்றீர்கள் என்று ஓரளவிற்குப்பார்த்து கணிக்கமுடிகின்றதா? என்று கேட்கப்பட்டது.
“இல்லை...விமானம் கீழே போகின்றது.மிகவும் கீழே போகின்றது.மிக மிக..ஐயோஓஓஓ..
இத்துடன் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது.அப்பொழுது சரியாக 8 மணி 46 நிமிடங்கள் 40 வினாடிகள்.அந்தவிமானம் உலகவர்த்தகக்கட்டிட்த்தின் மீது மோதியிருந்த்து.


விமானத்தில் இருந்த 81 பயணிகள் கோபைலட்,பைலட்,9விமானப்பணியாளர்கள் கட்டிடத்தில் இருந்தோர் அனைவரும் கண் இமைக்கும் நேரத்தில் மரணமடைந்தார்கள்.

Structure of the Twin Towers

No comments:

Post a Comment