Sunday, 30 September 2012

The dark knight படத்தில் கவனிக்கத்தவறிய தவறுகள்

ஹொலிவூட் படங்களில் அதுவும் பிரபலமாக ஓடிய உலகம் முழுவதும் பேசப்பட்ட படங்களில் தவறுகள் என்பது சற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம்.ஆனால் பெரும்பாலான ஹொலிவூட் படங்களில் விடப்படும் தவறுகள் அடுத்தடுத்த டேக்களில் விடப்படும் சிறிய ஓற்றுமையின்மைகளால் ஏற்படுத்தப்படுகின்றன.எமது படங்களைப்போல் நீயூட்டனின் ஈர்ப்புவிதிகளைப்புறக்கணிக்க என்ற கருதுகோளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதல்ல.2008 இல் டார்க்னைட் வெளிவந்தது  இயக்குனர் கிறிஸ்ரோபர் நோலன்.அண்மையில் டார்க் நைர் ரைஸெஸ் வந்து சக்கைபோடு போட்டிருந்தது.அதிலும் சில தவறுகள் இடம்பெற்றிருந்தன.அது அடுத்த பதிவில் தற்பொழுது The dark knightன் தவறுகள்.வீடியோ எடுத்தவன்தான் உண்மையில் வேற்றுக்கிரக ஜந்து

ஒரு வீடியோ பரவலாக இப்பொழுது facebook இல் ஷேர் பண்ணிக்கொள்ளப் பட்டு வருகின்றது ..ஒரு தாய் தனது குழந்தையை அடிப்பது போன்ற வீடியோதான் அது ...வீடியோவின் தலையங்கம் "நாசமப்போறவள் என்ன கொடுமையை செய்கிறாள் ?" ..வீடியோவில் காட்டப்பட்டிருக்கும் பெண்ணுக்கு மன நிலை சரியில்லை என்று தெளிவாகவே தெரிகிறது ...பின்னால் ஒரு சிறுவன் அதை சாதாரண நிகழ்ச்சி போல் பார்த்துகொண்டு இருக்கிறான் ..இதிலிருந்து இந்த நிகழ்ச்சி வழக்கமாக நடைபெறுவதாக தெரிகிறது ...அந்தப் பெண்ணை நாம் நொந்து கொண்டு ஒரு பயனும் இல்லை இவளவும் நடக்கும் போது அந்தக் குழந்தையைக் காப்பாற்றாமல் ...சர்வசாதரணமாக வீடியோ எடுத்த அந்தப் பன்னாடையை தான் நாங்கள் உண்மையில் திட்ட வேண்டும் ..வீடியோ எடுத்த வெங்காயம் தான் உண்மையில் வலது குறைந்த வேற்றுக்கிரக ஜந்து ..என்ன சொல்கிறீர்கள் ? (இது ஏதோ வெங்காயத்தை பிரபலப் படுத்த போடப்பட்டதல்ல ...உண்மையில் எனது கோபத்தின் வெளிப்பாடு இது ....) 

Saturday, 29 September 2012

WWE ரெஸ்லிங்க் உண்மையா ?பொய்யா?-06


இத்துடன் 6 ஆவது பதிவு இதில் தலைவர் அண்டர்டேக்கரைப்பற்றி கூறுவதாக கூறியிருந்தேன்.அதற்குமுன்பாக சில விடயங்களைப்பார்த்துவிடுவோம்.சில பிரபலமான டி.வி நிகழ்ச்சிகளில் ரேட்டிங்க் குறைந்தவிடன் பார்வையாளர்களை மீண்டும் அதிகரிப்பதற்காக சில பிரபலங்களை அழைப்பது வழக்கம்.அவ்வாறு WWEயும் பல துறையை சேர்ந்த பல பிரபலங்களை அழைத்துள்ளது.இதற்குள்WWEஇன் சில பழைய லெஜண்ட்களும் அடக்கம்.

யார் யார் வந்துள்ளார்கள்? ஒவ்வொருவராகப்பார்ப்போம் ஒரு லிஸ்டே இருக்கின்றது.


.5ஆவது பதிவுக்கு இங்கேகிளிக்.

மைக் டைசன்...ஆமான ஆளைத்தான் ஆமான இடத்திற்கு அழைத்திருக்கின்றார்கள்...
டைஸன் 2,3 தடவைகள் WWEற்கு கெஸ்ட்டாக வந்திருக்கின்றார்.டி.எக்ஸ் என்ற டீமுக்கு சப்போர்ட்டாக வந்த டைஸன் கிறிஸ் ஜரிக்கோவை நொருக்கியபோது....இது 1998 இல் டைஸன்வந்தபோது ஸ்ரோன் கோல்ட் டைஸனுடன் தர்க்கத்தில் ஈடுபட்டபோது...எனக்கு மிகவும் பிடித்தவர் ஸ்ரோன் கோல்ட்தான்.ஆனால் உண்மையை ஒத்துக்கொண்டுதானே ஆகவேண்டும்.இது ரெஸ்லிங்க் ஆகையால் டைஸன் சும்மா தள்ளியதுடன் விட்டார்.இல்லையெனில் ஸ்ரோன் கோல்டின் முகரை பெயர்ந்திருக்கும்..42 இற்கு ஒன்று என்ற வீதத்தில் தான் டைஸன் வென்றிருக்கிறான் 42 பேர் அவுட் ஒருவரிடம்தான் தோல்விஎன்றால் சும்மாவா?
ஸோன்மைக்கல் வாங்கிக்கட்டியபோது.....


அடுத்து வருகை தந்த பிரபலம் ஆணழகர் பொடிபில்டிங்கின் கடவுள்போல் போற்றப்படும் ஆர்னோல்ட் சுவாஸினேக்கர்......
ஆள் வந்ததும்தான் வந்தார் டைட்டிலை தூக்கி அவரிடமே கொடுத்துவிட்டார்கள்....hasta la vista baby.......வந்ததும் ஒஸ்ரினுக்கு உதவி செய்தார் கதிரையை எடுத்துக்கொடுத்து.இதனால் கடுப்பாகிய ட்ரிபிள் ஏஜ் தாக்குவதற்கு வர ஆர்னோல்ட் ஓங்கி ஒரு அடி அவ்ளவுதான்...முதலில் ரோக்கை சந்தித்தபோது..மேலும் வருகைதந்த பிரபலங்கள் சிலர்.....

David Michael Hasselhoff(நைட் ரைடர் ஹீரோ)

Criss Angel (பிரபல மாகிக்ஸன் மற்றயவர்களது கைகளை துண்டாக பலர் முன்னிலையில் வெட்டி முரட்டு மாஜிக் செய்பவர்.இவரைப்பற்றி தனிபோஸ்டில் பார்ப்போம்)

Hugh Michael Jackman(எக்ஸ்மான் பட ஹீரோ)

லிஸ்ட் இவர்களுடன் நிற்கவில்லை பெரிய பட்டாளமே இருக்கின்றது.இதை கிளிக் செய்து அந்த லிஸ்டை அவதானியுங்கள்.

அட முக்கியமான ஒருவரை மறந்துவிட்டேன் சில்வெஸ்ரர் ஸ்ரெலோன்...ராம்போ......அத்துடன் WWE மிகப்பெரிய லெஜன்ட் ஹல்க் ஹோகன் வந்திருந்தார்.2,3 ஜெனரேசன் ரசிகர்கள் அவருக்கு.ரண்டி அவரது தோளில் சிறுவனாக போட்டோ எடுத்தவர் என்றால் பாருங்கள்.ரசிகர்கள் கதைக்க விடவே இல்லை.ஹோகன் ஆணழகராக தெரிவு செய்யப்பட்டவர்.
இந்த சிறுவந்தான் ரண்டி ஓர்ரன்அண்டர்டேக்கர்....

டேக்கரின் சகோதரன்தான் கேன் என்று WWE காட்டியுள்ளது.ஆனால் உண்மையில் இருவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.பொதுவாக WWE இல் காதலர்களாக மனைவிகளாக சகோதரர்களாக காட்டப்படும் உறவுகள் டி.வி சீரியல் போன்றே போலிகளாகத்தான் இருக்கும்.

டேக்கரின் உண்மையான பெயர் Mark William Calaway . ரேக்கரின் மனைவியின் பெயர் சாரா.இது உண்மை ரேக்கரின் 2 ஆவது மனைவியின் பெயர் சாராதான்.இப்பொழுது அவரையும் விவாகருத்துச்செய்துவிட்டார்.
ரேக்கருடன்  மனேஜர் ஒருவர்( Paul Bearer) வருவார் கையில் ஜாடியுடன்.உண்மையில் இவர் ரேக்கரின் மனேஜர்தான்.
ரேக்கரின் ஃபினிஸ்ஸிங்க் சோர்ட்டான டொம்ஸ்ரோனில் உள்ள ரகசியம்.தலையை முட்டிக்கு மேலேகவைத்திருக்கவேண்டும்.இதற்கு நிச்சயம் பலசாலியான ஒருவர்தான் தேவை சாதாரணமாக ஒருவர் இன்னொருவரை இப்படிதூக்கி அடிக்க முயன்றால் இருவரும் விழுந்துவிடுவார்கள்.சோ மிகவும் கவனமாகத்தான் இருக்கவேண்டும்.ஆனால் ஒரு இடத்தில் இது வெளிப்படையாக தெரிந்துவிட்டது.முட்டிக்கும் தலைக்குமான தூரம் அதிகரித்துவிட்டது.


ஒருவரை சவப்பெட்டிக்குள் இட்டுக்கொளுத்துவது.கண்ணாடிக்கூடுக்குள் ஒருவரை வைத்து சீமெந்தால் நிரப்பிவிடுவது போன்றவிடயங்களை ரேக்கர்தான் வழமையாக செய்வார்.அப்படி ஒரு முறை தனது மனேஜரை சீமெண்ட்டினால் மூடிய போது எடிட் செய்யாது விட்ட காட்சிகள்.இந்தக்காட்சி ரசிகர்கள் இல்லாதபோது எடுக்கப்பட்டுள்ளது.
சிங்கார என்ற WWEஇன் ஸ்ரார் அதிகஉயரத்தால் பாய்வதை ஏதோ அவரே பாய்வதுபோல்தான் காட்டுகின்றார்கள்.ஒரு பதிவில் தெளிவில்லாத போட்டோதான் போட்டிருந்தேன்.இந்த பதிவில் அதற்கு ஆதாரமான வீடியோவே கிடைத்துவிட்டது.நீங்களே பாருங்கள்.போராட்டமில்லாமல் விடுதலை இல்லை


வெள்ளை மாளிகையின் கருப்பு அடிமைகள்-05

போன பதிப்பில் அடிமைகளுக்காக போராடிய அபாலிஷனிஸ்ட் எனும் இயக்கத்தையும் அதற்கு உறுதுணையாய் நின்ற காரிசன் மற்றும் டக்ளசைப் பற்றி பார்த்தோம். அப்பதிவை வாசித்து விட்டு தொடர இங்கே கிளிக்.                 இவ்வாறு காரிசனும், டக்ளசும் இணைந்து மேற்கொண்ட பிரச்சாரங்களும் போராட்டங்களும் அமெரிக்க மக்களுக்கு அடிமைகள் முகம் கொடுக்கும் பிரச்சனைகளை தெளிவுபடுத்த தொடங்கின.

  தங்களை போன்ற ஓர் அடிமை தப்பித்ததும் அல்லாமல் தமக்காக எல்லாம் போராட்டங்களிலும் கூட்டங்களிலும் ஈடுபடுவது கறுப்பினக் கூட்டத்தாரிடையே டக்ளசை தங்கள் மனச்சாட்சியின் உருவமாக பார்க்க வழிவகுத்தது. 1840 ஆம் ஆண்டுகளின் பின்னர் எல்லாம் கருப்பினத்தாருக்கும் அடிமைகளுக்கும் டக்ளஸ்தான் ஒரு நடமாடும் கடவுளாக தென்பட்டார். இவ்வாறு ஆங்காங்கே தலை தூக்கிய “அடிமை முறையை ஒழிப்போம்” எனும் இக்கோசம்தான் படிப்படியாக வளர்ந்து 1860  ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில்  அடுத்த அமெரிக்க அதிபர் யார்..?? எனும் கேள்விக்கு பதிலாக அமைந்தது. இக்காலகட்ட தேர்தலில் அடிமைகள் பிரச்சனைதான் முக்கிய செல்வாக்கை செலுத்திய காரணத்தால் பிரடரிக் டக்ளஸின் ஆதரவை பெற்ற கட்சிக்கு கூடிய ஆதரவு மக்களிடையே இருக்கும் என கருத்துக்கள் நிலவின. இதையறிந்திருந்த டக்ளசும் “அமெரிக்க அதிபர் யாராயினும் அடிமைகளுக்காக உழைக்க அவர் தயார் என்றால் அவருக்காக உழைக்க நான் தயார்..” எனக் கூறியிருந்தார். 
                                                   
                                             இதற்கேற்றாப் போல “அடிமைகளுக்கு நல்லது செய்யப்படும்” எனும் வாக்குறுதியை முன்வைத்து தேர்தலில் போட்டியிட்ட  குடியரசுக்கட்சியின் வேட்பாளராக நின்றவர்தான் ஆபிரகாம் லிங்கன். அடிமைகளுக்கு நல்லது செய்வோம் எனும் அடிப்படையில் டக்ளஸின் ஆதரவையும் கோரியிருந்தனர் இக்கட்சியினர். இதை ஏற்றுக்கொண்டு டக்ளசும் , அபாலிஷனிஸ்ட்களும் இக்கட்சியின் வெற்றிக்கு கடுமையாக உழைக்க தொடங்கியிருந்தனர். இவ்வாறு வட அமெரிக்காவில் தேர்தல் வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கையில் தென்னமெரிக்காவிலோ நிலமை முற்றிலும் வேறுவிதமாக இருந்தது.

                          இவ்வாறு  அடிமைகளை ஆதரித்து பிரச்சாரங்கள் செய்வதும் அவர்களுக்காக போராட்டங்களில் ஈடுபடுவதுமாக வடஅமெரிக்கா இருந்தால் பெருமளவு விளைநிலங்களையும் அதிகளவு பிரபுக்களையும் கொண்ட அமெரிக்காவின் தென்மாநிலங்களில் “அடிமைகளை விடுவிப்போம்” எனும் கோசம் துளியளவில் கூட எழாதவாறு வலுக்கவனமாக பார்த்துக்கொண்டனர். ஏனெனில் ஏராளமான விளைநிலங்களில் அடிமைகள் மூலம் கிடைக்கும் பெருமளவு இலாபத்தையும் விளைச்சலையும் அடிமை முறையை ஒழிப்பதன் மூலம் இழக்க தென்மாநில மக்களும் பிரபுக்களும் முற்றிலும் தயாராக இருக்கவில்லை. இதனால் “அடிமைகளுக்கு விடுதலை” எனும் சொல்லே அவர்களுக்கு காதில் ஈயத்தை காச்சி ஊற்றியது போல்தான் இருந்தது. காலம் காலமாக தம் காலடியில் நசுக்கப்பட்டு தமக்காக உழைத்த அடிமைகளை விடுவிக்க அவர்கள் துளியளவில் கூட விரும்பவில்லை. இதன் காரணமாக தம் காலடி நாய்களான அடிமைகளுக்கு ஆதரவான ஒருவர் அமெரிக்காவின் அதிபர் ஆவது ஓட்டு மொத்த அமெரிக்காவுக்கும் மிக்கப்பெரும் அவமானம் என்று கருதிய நிலையில் ஆபிரகாம்லிங்கனின் தோல்விக்காக தென்மாநில மக்களும் பிரபுக்களும் கடுமையாக முயற்சிகளை மேற்கொள்ளத்தொடங்கினர். 

கட்டுரையை தொடர  இங்கே கிளிக்

Friday, 28 September 2012

முகம்மது நபி கிளம்புகின்றது வேறொரு பூதம்


ஏற்கனவே நபிகளைப்பற்றிய ஒரு ட்ரெயிலருக்கு உலகத்தை படாதபாடு படுத்திக்கொண்டிருக்கின்றார்கள்.படத்தின் சர்ச்சையை முடித்துக்கொள்ள முனையாது சில நாடுகளில் சில  புரட்சிகரமான எழுத்தாளர்கள் நபிகளுக்கெதிரான படத்தை ஆதரித்தும் எதிர்த்துப்போராடும் முஸ்லீம்களை நையாண்டி செய்தும் தமது கருத்துக்களை வெளியிட்டு எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றிக்கூத்துப்பாக்கின்றார்கள்.இதைப்பற்றிய ஒரு பதைவை முன்பே இட்டிருந்தேன்.அந்தப்பதிவில் நான் சர்ச்சைக்குரிய அந்த வீடியோவையும் இட்டிருந்தேன்.நபிகளுக்கெதிரான கருத்துக்களை கூறுவிட்டார்கள் நபியைஅவமானப்படுத்திவிட்டார்கள் என்று குமுறும் சிலரை விசாரித்ததில் அவர்கள் வெறும் கேள்விப்பட்டிருக்கின்றார்கள் அவளவுதான்.அந்த வீடியோவைப்பார்த்திருக்கவில்லை தாம் எதர்க்காக எதிர்க்கின்றோம் என்றவிடயத்தை செவிவழியாக அறிந்திருக்கின்றார்கள் அவ்வளவுதான்.பதிவின் இறுதியில் அந்த வீடியோவை யூ டியூப்பில் இருந்து  ஏன் நீக்கவேண்டும் என்பதற்காக காரணத்தையும் இறுதியில் நீக்கவேண்டும் என்றும் கூறியிருந்தேன் அந்தப்பதிவுக்கு எனக்கு நல்லபதில் கிடைத்தது.


தெரியாமலே பலர் வீறுகொண்டெழுகின்றார்களே என்றுதான் லிங்கைப்போட்டிருந்தேன்.சரி தப்புத்தான் என்று நீக்கியபின் ஒரு பின்னூட்டம் கிடைத்ததுபாருங்கள்."முகம்மட் சல் உனக்குமட்டுமில்லையெடா உலகத்துக்கே தூதர்..எவன் அவர அவமதித்தாலும் உடம்பில தலை இருக்காது.கெயார்ஃபுல்..."

எங்குபோய்த்தலையை முட்டிக்கொள்வது என்று தெரியவில்லை.இவர்களுக்கு நான் ஆதரவளித்தேனே என்று தோன்றியது.சரி எது எப்படியிருந்தாலும் அந்த மதிப்பிற்குரிய பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே....


இது இப்படி இருக்க சர்ச்சைக்குரிய படத்தின் இயக்குனர்Nakoula Basseley Nakoulaஐ கைதுசெய்திருக்கின்றார்களாம்.காரணம்  Innocence of Muslims என்ற சர்ச்சைக்குரிய படம் அல்ல.2010 இல் இவர் செய்த குற்றத்திற்காக 5 ஆண்டுகள் நீதிமன்ற அனுமதியில்லாமல் இணையத்தளம் கொம்பியூட்டர்களை பயன்படுத்தக்கூடாது என்று தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.இவர் அதை மீறிவிட்டார் இதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.இக்குற்றத்திற்கு இவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மற்றுமொரு கைது நடவடிக்கையும்  நடைபெற்றுள்ளது.பிரேசில் நாட்டின் யூ டியூப் கிளையின் உயர் அதிகாரியான ஃபபியோ ஜொசே சில்வா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பிரேசிலில் உள்ள நஷனல் இஸ்லாமிக் என்ற அமைப்பு  தொடர்ந்த வழக்கினடிப்படையில் இக் கைது நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டுள்ளது.படத்தின் ட்ரெயிலரை 10 நாட்களுக்குள் நீக்கவேண்டும் என்று நீதிமன்றம் கட்டளையிட்டிருந்தது.ஆனால் கட்டளை நிறைவேற்றப்படவில்லை.இதைத்தொடர்ந்து இக்கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இது யூ டியூப் தளத்தில் சில சலனங்களை ஏற்படுத்தினாலும் இது பிரேசிலில் வெற்றியளிக்கலாம் ஆனால் யூ டியூப்பிடம் இது பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கமுடியாது.
அவனவன் இப்படத்தால் கொந்தளித்துப்போயிருக்க மேலும் இதே பாணியில் 2 படங்கள் வெளிவரப்போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இப்படங்களின் இரு இயக்குனர்களும் இஸ்லாமில் இருந்து வேறு மார்க்கத்திற்கு மாறியவர்கள்தான்.ஒரு இயக்குனரின் பெயர் மொசாப் ஹசன் யூசுப் 30 மில்லியன் டொலர் செலவில் படத்தை எடுக்கின்றார் பிறப்பால் பலஸ்தீனர் தற்போது இவர் அமெரிக்க சிட்டிசன்.படத்தின் டைட்டில் மொஹமட்.மற்றைய இயக்குனரின் பெயர் அலி சினா இவர் கனடா  நாட்டை சேர்ந்தவர்.10 மில்லியன் டாலர் செலவில் படத்தை எடுக்கின்றார்.

பிரான்ஸிலும் ஒரு விடயம் நாட்டையே குழப்பியது.சார்லி ஹெப்டோ என்ற பத்திரிகை முகம்மதுவின் கேலிச்சித்திரம் ஒன்றை வெளியிட்டது..இதனால் உடனடியாக 20 நாடுகளில் உள்ள பிரான்ஸ் தூதரங்களுக்குப் பாதுக்காப்பு நல்கியது. உலகம் முழுவதும் உள்ள பிரஞ்சு பள்ளிகள் சில மூடப்பட்டன. இதற்கெதிரான இஸ்லாமியப்போராட்டங்கள் முழுவதையும் பிரான்ஸ் தடைசெய்துள்ளது.தடையை மீறிப் போராடத் துணிந்த 150 போராட்டக்காரர்களை உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.இதன்பின்னர்  ஒரு கருத்துக்கணிப்பை மேற்கொண்டார்கள் TNS குழுமத்தால் அண்மையில் கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டது 58 சதவீதம் பேர் பேச்சு உரிமைக்கு ஆதரவுக் கொடுத்துள்ளனர், அதே சமயம் 71 சதவீதம் பேர் இஸ்லாமிய தெருப் போராட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.


ஒரு விடயம் மட்டும் உண்மை நபியை விமர்சித்த இனஸன்ஸ் ஒஃப் முஸ்லீம் திரைப்பட ரெயிலர் எதிர்ப்பின் முன் இந்தப் பிரச்சனை பெரிதாக எடுபடவில்லை....

போகிறபோக்கைப்பார்த்தால் இனி அல்கொய்தாவே நேரில் இறங்குமோ என்றுதான் எண்ணத்தோன்றுகின்றது..

(தற்போது கிடைத்துள்ள செய்திகளின்படி இயக்குனர் கைதுசெய்யப்பட்டுள்ளார்)

பவர்ஸராருக்கு வந்த சோதனை...முகப்புத்தகத்தில் எதிர்க்குரல்கள்

அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியில் தலிவர் பவர் மேலயே கையை வச்சுப்புட்டாங்க....
தலைவர் டாக்டர் இல்லையாம்..இங்கு பல நடிகர்கள் எம்பி பி எஸ் படித்தா டாக்டர் ஆனார்கள்? என்ன கொடுமை...இதைப்பற்றிய ஒரு நீண்ட தொகுப்பை விஜய் டி.வியில்   நடந்தது என்னவில் ஓளிபரப்ப இருப்பதாக நம்பத்தகாத இடங்களில் இருந்து தகவல்கள் வந்திருக்கின்றன..
ஒரு படத்தை வெளியிட்டதும் சினிமா உலகில் மிக பிரபலமானவர்களிடம்  உடனடியாக கருத்துக்கேட்பார்கள் ....அப்படி பவரிடமும் கேட்டிருக்கின்றார்கள்...முதன் முதலில் பில்லா 2 வந்ததும் பவரிடம்தான் பில்லா பற்றி கருத்துக்கேட்கப்பட்டது....அஜித் ரசிகர்களுக்கு கடுப்பாக்கக்கூடிய விடயம்தான்....

ஒரு சாதாரண ஒரு நிகழ்ச்சிக்கு எந்த நடிகனாவது போவானா ஆனா பவரு அப்படியல்ல
...ஆதாரம் கீழே.. 

.

அண்மையில் பவரை கைது செய்ததால் ரசிகர்கள் கொந்தளித்திருந்தார்கள்


இன்னிலையில் விகடனில் செய்திவெளியாகியிருந்தது அவர் டாக்ரர் இல்லையாம் அத்துடன் காமடிப்பீஸ் என்றும் குறிப்பிட்டிருந்தார்கள்.இது வன்மையாகக்கண்டிக்கத்தக்கது..பவருன் ரசிகன் என்ற முறையில் இதை வன்மையாக கண்டிக்கின்றோம் ஏதோ நான் மட்டும்தான் கண்டிக்கின்றேன் என்று நினைத்தீர்களா முகப்புத்தகத்தில் போய்பாருங்கள் ரசிகர்கள் கண்ணீர்விட்டுக்கதறி அழுதிருக்கின்றார்கள்.

///கோவில்ல இருந்த தெய்வம் நீ
இப்போ கூண்டுக்குள் சிக்கினாய்!
பச்சே.....
எங்கள் இதய கூட்டுக்குள்
எப்போதும் வாழ்கிறாய்!
 //
தங்க தலைவன் பவர்ஸ்டாரின் கைதுக்கு பின்னால் அல்ட்ரா ஸ்டார் சாம் அண்டர்சன் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இனி வரும் காலம் சாம் அண்டரின் காலமோ?
சினம் கொண்ட சிங்கத்த சிறையில அடச்சுட்டாங்க 
இனி நடக்க போற அசம்பாவிதத்துக்கு தலைவன் பொறுப்பில்ல.......!!!!!!!!!!!

பவர் ஸ்டார் கைது - திடுக்கிடும் உண்மைகள் 

வளர்ச்சியை கண்டு பொறாமை....
முன்னாள் சூப்பர் ஸ்டார் , மாஜி உலக நாயகன் கூட்டுசதி அம்பலம் 

# தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மறுபடியும் தர்மம் அதை வெல்லும்


கோடி கோடியாய் சம்பாதிப்பதில் ஆட்சேபனை இல்லை . .நியாயாமான தேவைக்கு எடுத்துக்கொண்டு பாக்கியை சமூகத்துக்கு பயன் படுத்துங்கள் .#காந்தி #இதைதானே தலைவர் செஞ்சார் . . ஏன்யா கைது?

ஐய்யகோ...இந்த நாட்டில் நீதி இல்லயா....தர்மத்துக்கு சோதனையா....
காவல் துறை அராஜகம் ஒங்குக சை ஒழிக......
பவர்ஸ்டார் வாழ்க.....


ஜெயிலில் பவர்ஸ்டார்
-------------------------------

பக்கத்து லாக்கப் குரல்: என்னப்பா மர்டர் கேஸா...???
பவர் ஸ்டார்: ம்ஹூம்...

ப.லா.கு: ஃபைனான்ஸ் கம்பெனி எதுவும் நடத்துனியா...???

ப.ஸ்: இல்லை...

ப.லா.கு: செக்ஸ் படம் எடுத்து நெட்ல விட்டியா...???

ப.ஸ்: இல்லை... (உறுமலுடன்)

ப.லா.கு: பின்ன என்னதான் தப்பு பண்ண...???

ப.ஸ்: நாட்டுக்கு நல்லது பண்ணேன்...!

ப.லா.கு: அப்ப, உள்ள தள்ள வேண்டியது தான்...!

ஜெயிலில் பவர்ஸ்டார்
-------------------------------

பக்கத்து லாக்கப் குரல்: என்னப்பா மர்டர் கேஸா...???

பவர் ஸ்டார்: ம்ஹூம்...

ப.லா.கு: ஃபைனான்ஸ் கம்பெனி எதுவும் நடத்துனியா...???

ப.ஸ்: இல்லை...

ப.லா.கு: செக்ஸ் படம் எடுத்து நெட்ல விட்டியா...???

ப.ஸ்: இல்லை... (உறுமலுடன்)

ப.லா.கு: பின்ன என்னதான் தப்பு பண்ண...???

ப.ஸ்: நாட்டுக்கு நல்லது பண்ணேன்...!

ப.லா.கு: அப்ப, உள்ள தள்ள வேண்டியது தான்...!

தலைவர் பவரை பொலீஸார் கைது செய்துள்ளார்களாம்.என்னால் நம்பவே முடியவில்லை உலகெல்லாம
் பவரின் ரசிகர் மன்றக்கிளைகள் இருக்கின்றன.அனைத்து நாடுகளில் உள்ள ரசிகர்கள் கொந்தளித்தால் என்ன ஆகும்? கொய்யால யார் எண்டு தெரியாம கைவச்சுட்டாங்கள் வரலாறு இதை மன்னிக்காது....எதுக்கெடுத்தாலும் சிரிக்கிறதால பவர இளிச்சவாயன் என்று நினைத்துவிட்டார்கள்.ரசிகர்கள் தீக்குளிக்க தயாராக இருக்கின்றார்கள்... கடைய உடைங்கடா.....ஸ்கூல பூட்டுங்கடா கோர்ட்டை மூடுங்கடா...ரசிகர்களே விஜய் படத்தில் ஆளுங்கட்சி செய்யும் பந்தை விட நமது எதிர்ப்பு வலுவாக இருக்கவேண்டும்.

தலைவரையே கைது செய்துட்டாங்களா??
50 லட்சம் ரசிகர்களிண்ட கையும் பூப்பறிக்குமா??
ஒவ்வொரு ரசிகனும் 2 ரூபா போட்டாலே போதும் இவ்வளவு காசை புரட்ட!! அவர் எண்டா மோசடி செய்யணும்!!

தங்கத் தலைவன் தன்னிகரில்லாத் தமிழன் வெறும்
65 லட்ச ரூபா மோசடி வழக்கில் கைது.......

#தலைவா சத்திய சோதனைத்திகா’ திரைப்படத்தின் மூலம் தமிழகம் முழுக்க காமெடிப் பீஸாகப் பேசப்பட்ட 'பவர் ஸ்டார்’ சீனிவாசன், இப்போது பண மோசடிக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருக்கிறார். 
அவரது கைது குறித்து சினிமா ஆட்கள் சிலரிடம் பேசினோம். ''சீனிவாசனுக்குப் பூர்வீகம் மதுரை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் மருத்துவ அணியில் இணைச் செயலாளராக இருந்தார். இவருக்கு மூன்று மனைவிகள். இரண்டாவது மனைவிக்குப் பிறந்த மகள் பெயர்தான் லத்திகா. அவர் பெயரில்தான் 'லத்திகா’ என்ற படம் எடுத்து, தானே ஹீரோவாக நடித்தார். ஆடியோ வெளியிடும் விழாவை கமலா தியேட்டரில், திருமாவளவன் தலைமையில் நடத்தினார். மகாலட்சுமி தியேட்டரில் 11 மணிக் காட்சியில் 'லத்திகா’ படத்தை வாரம் 20,000 ரூபாய் சொந்தப் பணம் கட்டி 175 நாட்கள் ஓட்டினார். அதுபோல இன்னொரு திரையரங்கிலும்  பணியாளர்களுக்கு தினமும் சிக்கன் பிரியாணி வாங்கிக்கொடுத்து 50 நாட்கள் ஓடவைத்தார்.      
'லத்திகா’வுக்குப் பிறகு, சீனி ஹீரோவாக நடிக்கும் 'ஆனந்த தொல்லை’, 'திருமா (எ) திருமாணிக்கம்’ படங்கள் படப்பிடிப்பில் இருக்கின்றன. அஜீத், விஜய் ஜோடியாக நடித்த சங்கவி, சீனிக்கு நாயகியாக நடித்து முடித்துள்ள படம் 'தேசிய நெடுஞ்சாலை’. சீனி முதலில் சின்ன கேரக்டரில் நடித்து வெளிவந்தது 'மண்டபம்’ திரைப்படம். அந்தப் படத்தை இயக்கிய செந்தமிழ்அரசு என்ற புண்ணியவான்தான் முதன்முதலில் சீனிக்கு 'பவர்ஸ்டார்’ பட்டத்தை பத்திரிகை விளம்பரத்தில் வெளியிட்டு, தமிழ் சினிமா ஹீரோக்களின் வயிற்றில் புளியைக் கரைத்தார். அவரே இப்போது 'மன்னவனே’ படத்தில் சீனியை நடிக்க வைத்துள்ளார்.
சென்னையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து, அதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக சிறைக்குச் சென்றவர்தான் சீனி. அவர் சென்னை அண்ணா நகரில் மட்டும் ஆறு அலுவலகங்கள் வைத்து இருக் கிறார். அங்கெல்லாம் ஆரம்பத்தில், 'பாபா டிரேடிங் கம்பெனி’ என்ற பெயரில் ஹெர்பல் மருந்துகளை ஏற்றுமதி செய்து வந்தார். அதை இப்போது நிறுத்தி விட்டார்.
தன்னைப் பார்க்க வரும் நபர்களை சீனி சந்திக்கும் விதமே அலாதியாக இருக்கும். யார் கேட்டாலும், சரியாக 10 மணிக்கு வரச்சொல்லி அப்பாயின்மென்ட் கொடுப்பார். தினமும் கிட்டத் தட்ட 20 நபர்களுக்கு 10 மணி சந்திப்புக்கு அழைப்பு அனுப்புவார். அப்படி வருபவர்களை, தனித்தனியாக வெவ்வேறு அறைகளில் பிரித்து அமர வைப்பார்கள். சீனிக்கு நெருக்கமான புள்ளிகளை மட்டும் அவருடைய பெர்சனல் அறைக்கு வெளியே இருக்கச் செய்வார்கள். சாய்பாபா படத்துக்கு முன், ஊதுபத்தி மணம் கமழ, ஸ்பீக்கரில் ஓம் மந்திரம் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
சீனி ஆபீஸில் இருக்கிறாரா... இல்லையா? என்பது காத்திருக்கும் நபர்களுக்குத் தெரியாது. 12 மணிக்குத்தான் ஆபீஸுக்கு வருவார். யார் கண்ணிலும் படாமல் அறைக்கு எப்படிப் போவார் என்பது, அவரது ஊழியர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். அவருடைய மேஜை டிராயரில் 1,000, 500 ரூபாய் சலவை பண்டல்கள் கண் சிமிட்டும். மருந்துக்குக்கூட 100 ரூபாய், 50 ரூபாய் தாள்கள் இருக்காது. புகழ்ந்து போஸ்டர் அடிப்பவர்கள், ரசிகர் மன்றம் தொடங்கும் புள்ளிகள் போன்றவர்களை முதலில் தனித்தனியாக அழைத்து... பணத்தைக் கொடுத்து அனுப்புவார். முதல் முறையாகக் கடன் கேட்டு வருபவர்களை நன்றாகக் கவனித்து அனுப்புவார். பலரை சந்திக்காமலேயே, 'பிஸி’ என்று விரட்டுவார்கள். திரும்பத் திரும்பத் தொந்தரவு செய்பவர்களுக்கு நிச்சயம் தனியே அழைத்து 'கவனிப்பு’ உண்டு. மதியம் சாப்பிடச் செல்பவர் அடுத்து 7 மணிக்குதான் ஆபீஸுக்குத் திரும்புவார். ஒரு சிலரை அத்தனை நேரமும் காத்திருக்கச் சொல்வார்கள்.
தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நடந்த போது தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட எஸ்.ஏ.சந்திரசேகரன், கேயாரை எதிர்த்து சீனிவாசன் போட்டியிட்டார். தயாரிப் பாளர்கள் சிலரின் வீடுகளுக்கு தேடிச் சென்று பணம் பட்டுவாடா செய்தார் என்றாலும் மொத்தமே 16 ஓட்டுக்கள் மட் டுமே வாங்கித் தோற்றார்.  
அண்ணா நகரின் இன்னொரு பகுதியில் 'லத்திகா கிளினிக்’ நடத்தி வருகிறார். ஆனாலும், சீனி தனது பெயருக்குப் பின்னே டாக்டர் பட்டம் போட்டுக் கொள்வது இல்லை. ஏன் தெரியுமா? சீனிவாசன் எம்.பி.பி.எஸ். படிக்கவில்லை. அக்குபஞ்சர் மற்றும் ஹோமியோபதி பற்றி அரைகுறையாகப் படித்துத் தெரிந்து கொண்டவர். இப்போது, இவர் மீது பதிவான வழக்கையும் தனது பவர் காட்டி ஒன்றும் இல்லாமல் ஆக்கி விடுவார்'' என்கிறார்கள்.
சீனிவாசனின் உதவியாளரான செல் வாவிடம் பேசினோம். ''பவர் ஸ்டார் முறைப்படி படித்த அக்குபஞ்சர் டாக்டர். தேவை இல்லாம அவரைப்பத்தி வதந்தி களைப் பரப்பி விடுறாங்க. பவர் ஸ்டார் மீது இப்போது தொடரப்பட்டிருப்பது அனைத்துமே பொய் வழக்குகள். கூடிய சீக்கிரமே நீதிமன்றத்தில் தன்னை நிரபராதி என்று நிரூபித்து வெளியில் வருவார். அண்ணனுக்காக உயிரையும் கொடுக்கக் கூடிய லட்சோப லட்சம் ரசிகர்கள் இருக்கும் வரை அவரை யாராலும் எதுவும் செய்ய முடியாது'' என்று கொந்தளித்தார். காமெடிப் படம் என்று நினைத்தால் திகில் படமாக இருக்கிறதே..!

wwe ரெஸ்லிங்க் உண்மையா? பொய்யா?-05


இது 5 ஆவது பதிவு.ரெஸ்லிங்க்கில் இரத்தம் வருவது என்பதைப்பற்றி முன்பே ஓரளவுக்கு பார்த்திருந்தோம்.இரத்தம் வருவதற்காக கப்ஸூல்களைப்பயன்படுத்துகின்றார்கள் என்று.இதை ஒரு பேட்டியின்போது காலி உறுதிப்படுத்தியிருந்தார்.அதிகளவான மச்களில் வரும் இரத்தம் கப்ஸூல்கள் மூலம் வரவழைக்கப்படுகின்றன என்று.காலியின் பேட்டிஇதன் முன்னைய பதிவுக்கு இதை கிளிக் செய்யவும். 


ஆனால் மச்களில் உண்மையாகவே இரத்தம் வரவழைக்கப்பட்டும் இருக்கின்றன.ஆனால் எவ்வாறு இவர்கள் கதிரை மேசைகளால் அடித்துவந்த இரத்தமா? இல்லை.இவர்களே தமது உடல்களை பிளேட்களால் காயப்படுத்திக்கொள்கின்றார்கள்.இதற்கு இவர்களுக்கு பிளேட்டை வழங்குபவர் வேறுயாருமல்ல சாட்சாத் ரெஃப்ரிதான்.
கீழே பாருங்கள் அதில் ஒருவரை மற்றவர் மேடையின் மூலையில் இருக்கும் கம்பிமுனைமீது தள்ளிவிடுவது போல் தோன்றினாலும் உண்மையில் என்ன நடக்கின்றது? அவருக்கு அடி படுவதே இல்லை.
ஆனால் இப்படியான தாக்குதல் நடைபெறுவதற்கு முன்னராக அடி வாங்குபவருக்கு பிளேட் ரெஃப்ரியால் வழங்கப்படுகின்றது.இல் இவ்வாறு வழங்கப்பட்ட பிளேட் மேடையில் தவறவிடப்பட்டபோது எடுக்கப்பட்ட காணொளி கீழேகிறிஸ்ட் ஜரிக்கோ என்பவருக்கு ரெஃப்ரியால் பிளேட்வழங்கப்படுதல்


காலி அண்டர்டேக்கருடன் மோதியதால் காலியின் வாயால் இரத்தம் வந்தது.அந்த இரத்தம் காலியால் கப்ஸூல் விழுங்கப்பட்டதால் ஏற்பட்டது.அதற்கான வீடியோ
wwe இல் ஒருவர் மற்றயவருக்கு அடிக்கும் அடிகள் போலியாவவை என்று எமக்குத்தெரியும்.ஆனால் அடி கொடுப்பது போல் கையை அல்லது காலை உடலுக்கு மிக அருகாமையிலாவது கொண்டு செல்வார்கள் ஆனால் அவ்வாறு இல்லாமல் வெளிப்படையாகவே அடிவாங்காமல் எஃபெக்டு கொடுத்தசந்தர்ப்பங்கள் கீழே..அய்யோ..அய்யோ...(வடிவேல் பாணியில்)ரண்டி வேஸ் சீமஸ்


ரெஸ்லிங்கின் பிரபலமான அடுத்த தாக்குதல் "பக் பிறேக்கர்" உக்கிய மரத்தை காலால் முறிப்பதைப்போல தம்மை நோக்கி ஓடிவருபவரை தூக்கி அவரது முதுகெலும்பை காலால் பதம்பார்த்தல்.

ஆனால் இதனால் அடிவாங்கியவரின் முதுகில் வலி இருக்காது கால்களிலேதான் இருக்கும்.காரணம் இவ்வாறு அடி வாங்கும்போது அடி வாங்குபவரின் கால்கள்தான் முதலில் தரையை அடைகின்றன. இவர் தனது நிறையை கால்களின்மீதே செலுத்துகின்றார்.ஆனால் நாம் அவற்றை கவனிக்கத்தவறி அவரின் கத்தலையும் அவரது முதுகையும் கவனித்துக்கொண்டிருப்போம்.சிங்காரா என்பவர் அண்மயில் ரெஸ்லிங்கிற்கு அறிமுகமாகி இருந்தார்.இவர் ரேமஸ்ரீறியோ மாதிரி இருப்பார்.மேடைக்கு இவர் வரும் ஸ்டையில்தான் அசத்தலாக இருக்கும் மேடையை நோக்கி ஓடிவந்து வந்தவேகத்தில் மேடையினருகில் நின்று 8 அடிக்கு மேலே இருக்கும் கயிற்றின் மேலாக உள்ளே பாய்வார்.எப்படிப்பாய்கின்றார்?

இப்படித்தான் பாய்கின்றார்...


அடுத்த பதிவில் அண்டர்டேக்கர்...

தொடரும்.........................

Thursday, 27 September 2012

Facebook இல் நண்பர்களை கலாய்க்க புதிய வழி.


பொதுவா நாம மத்தவங்கள எப்டிடா கலாய்க்கலாம், எப்படா அந்த Chance வரும்னு தவியா தவிச்சிட்டு இருக்கிறம். அதிலயும் Facebook எண்டா சொல்லவே வேணாம். எப்ப பாத்தாலும் இதபத்தி தான் நினைப்பெல்லாமே. எங்கட பாட புத்தகத்த தூக்கி வைச்சுக்கிட்டே நாம அததான்யா யோசிச்சுக்கிட்டு இருக்கிறம். ( அப்ப பாருங்கோவன்). ஒண்டில் நீங்க (இந்த இடத்தில் நாம எண்டு கதைக்க என் மனது இடம் தரவில்லை.) Facebook ல இருக்கீங்க.. இல்லேன்னா உங்க face உ book ல இருக்குது ( ஆக மொத்தம் இப்ப, படிக்கிறது Facebook ல படுக்கிறது உங்க book ல. (என்ன புழப்புடா இது. ) சரி அத விட்டுத்தள்ளுவம்... அது வேற department ஆச்சே....!!! இப்ப விசயத்துக்கு வருவம்.

அன்பு நண்பர்களே...!!! ஆசை பெரியோர்களே...!!! இது மிகவும் ஜாலியான  Friends ஐ கலாய்க்க கூடிய ஒரு வழி. இதில் உங்கள் முழு திறமையை காட்டுவதன் மூலம் (கொய்யால. இதிலயாச்சும் திறமைய முழுசா காட்டுங்கையா) உங்க Friends ஐ  "இதெப்படா Facebook la நடந்தது.. ஒரு வேளை எனக்கும் தெரியாம நித்திரையில நான் இப்டி comment  பண்ணி இருப்பனோ" எண்டு நினைக்க வைக்கிறதில இருந்து "எப்புடிடா இப்டி... இதெல்லாம் எங்கடா போயி படிச்ச...டேய் டேய்.. எனக்கும் சொல்லித்தாடா..."எண்டு அவங்க உங்ககிட்ட கெஞ்சிர வரைக்கும் ஆக்கலாம்.. அப்ப சந்தோசமா? ( இந்த இடத்தில் ஒன்று சொல்ல விரும்புகிறேன். இப்டி அவங்கள கலாய்ச்சு முடிச்சப்றம் அவங்க என்ன திட்டினாலும் அதற்காக நான் கடுகளவேனும் பொறுப்பு ஏற்கமாட்டேன் என்பதை தாழ்மையாக தெரிவிக்கிறேன்.) 

ஒபாமா உங்க போஸ்ட்ட லைக்பண்ணணுமா? பில்கேட்ஸ் உங்களுக்கு கொமண்ட் பண்ணணுமா? ரஜனிகாந்த உங்களை டாக் பண்ணணுமா? சமந்தா ஐ லவ் யூடா செல்லம் எண்டு உங்க ஸ்ரேட்டஸுக்கு கொமண்ட் போடணுமா? அதுக்கு ஒரு வழி நம்மக்கிட்ட இருக்குஆனா இதை மாதிரி பல போட்டோக்களை பார்த்திருப்பீர்கள்.வழி இருக்கு தொடருங்கள்

இப்படி Fake wall posts ஐ உருவாக்க பல வழிகள் ( paint , photoshop and some websites ) இருந்தாலும் "www.fakeconvos.com" எனும் தளம் இதனை மிக இலகுவாக தயாரிக்க வழி சமைத்து தருகிறது.( அடடே.... சமைத்து என்டோன்ன பசி வந்து சாப்ட போயிராதீங்க )


என்னால் உருவாக்கப்பட்ட sample fake post.

1.  இந்த தளத்திற்கு சென்று Facebook "login" button அ பயப்படாம click பண்ணுங்க.
2.  அடுத்து தோன்றும் window வில் உங்கள் Facebook username ஐயும் password ஐயும் கொடுத்து login செய்யுங்கள்.
3.  Create a new convo என்பதை கிளிக் செய்யுங்கள்.
4.  Name of Commenter இல் பெயரை எழுத்து பிழையின்றி type செய்யுங்கள்.( பிழையிருப்பின் இது நீங்கள் செய்த சித்து விளையாட்டு என மற்றவர்களுக்கு புரிந்துவிடும்.அப்புறம் நீங்கள் மொக்கையாகி விடுவீர்கள் )
5.  Browse images என்பதில் நீங்கள் விரும்பியபடி உங்கள் photos ஐ upload செய்யலாம் அல்லது facebook இலுள்ள உங்கள் friends இன் photo களை தெரிவு செய்யலாம் அல்லது google இல் photos ஐ தேடி add செய்யலாம்.
6.  அவர்கள் எப்டி comment செய்திருக்க வேண்டுமென நீங்கள் விரும்புகிறீர்களோ, அவ்வாறானதை நீங்கள் இதில் type செய்யுங்கள்.
7.  add to stream என்பதை கிளிக் செய்து இத்தரவனைத்தையும் add செய்யுங்கள். 
8.  தங்களுக்கு எவ்வளவு comments தேவையோ அவ்வளவு தடவைகள் 4 ஆம் step இலிருந்து மீண்டும் மீண்டும் செய்யுங்கள்.
9.  இறுதியாக save என்பதை கொடுங்கள்.
10.  அட அம்புட்டும்தான்யா....!!! வேலை முடிஞ்சுது....(மத்தவங்க சோலியும் முடிஞ்சுது.)
உழுந்து வடையில் பிரபஞ்ச ரகசியம்...


இந்து சமய விழக்களில் அதிகமாகப்பயன்படுத்தப்படுவது வடை இதில் மெது வடை கீரை வடை உழுந்துவடை என்று பல வகையறாக்கள் இருந்தாலும் இந்த ஓட்டை வடை இருக்கின்றதே அதில் இந்து சமயம் பிரபஞ்ச விடயம் ஒன்றை மறைத்துவைத்துள்ளது....ஓட்டைவடை அல்லது மெதுவடை பலரது வாழ்க்கையில் பிரிக்கமுடியாத அம்சம்...உழுந்துவடை சம்பல் ஒரு டி இதற்கு கே.எப்.சி யும் இணையாகாது என்பது எனது கருத்து.மேலே இந்துசமய விழாக்களில் என்று கூறியிருந்தேன்..கல்யாணவீடு,அந்தியோட்டி என்று எந்த நிகழ்விலாவது பலகாரங்கள் இருக்குமாயின் நிச்சயமாக மெதுவடை இருக்கும். நமது இந்து சமயத்தின் ஊடாக நமது அன்றாட வாழ்வின் அனைத்துவிடயங்களிலும் சம்பந்தப்பட்ட ஓட்டைவடையில் நம் முன்னோர்  ஒரு இரகசியத்தை மறைத்துவைத்துள்ளார்கள் என்று நம்முள் எத்தனை பேருக்குத்தெரியும்? இது நமக்கு மிகப்பெரிய வெட்கக்கேடு...சரி சரி வாருங்கள் நமது முன்னோரின் விஞ்ஞானத்தை அறிவோம்.......ஒரு கலக்ஸியின் பொதுவான வடிவமும் ஓட்டைவடையின் வடிவமும் ஒன்றுதான் ஒரு கலக்ஸியின் மத்தியில் ஒரு கருந்துளை இருக்கும் வடையின் மத்தியில் ஓட்டை இருக்கும்....உழுந்துவடையில் உள்ள உழுந்து துகள்கள்தான் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள். நமது கலக்ஸி வெள்ளை நிறமானது உழுந்துவடை வெள்ளை.அத்துடன் பிரபஞ்சம் விரிவடையும் ஓட்டைவடையை பேப்பரில் போட்டு அழுத்தினால் விரிவடையும்.பிரபஞ்சம் கோள்களை ஒரு பாயியில் அமிழ்ந்திருக்குமாறு கருதுகோள்களை எடுத்து கணிப்பிடும் கணிப்புகள் பௌதிகவியலில் உள்ளது.அந்தப்பாயிதான் வடையைப்பொரிக்கும் எண்ணை.(அகப்பை எதைக்குறிக்கின்றது என்று கேட்பது தடை செய்யப்பட்டுள்ளது) கலக்ஸி பற்றிய எண்ணக்கரு கண்டுபிடிப்பதற்கு எத்தனையோ ஆயிரம் ஆண்டுகள் முன்பே எம் முன்னோர்கள் இந்து சமயம் ஓட்டைவடையினூடாக கலக்ஸிபற்றி கூறிவிட்டது இப்பொழுது எமது சமயத்தின் ஏனைய உணவுகளான கொழுக்கட்டை,முறுக்கு போன்றவற்றில் நெபூலா நட்சத்திர வடிவங்கள் இருக்கலாமோ என்று நாஸா விஞ்ஞானிகள் ஆராச்சி செய்துவருகின்றார்கள்....பருப்புவடையில் ஓட்டை இல்லை இது பின்னர் வந்த வடையாகும் அன்னிய கலாச்சாரம் மதம் போன்றவற்றால் உழுந்துவடையின் ஓட்டை அடைக்கப்பட்டது நமது சமய விஞ்ஞானங்களும் பருப்புவடை மாதிரியே அடைக்கப்பட்டுவிட்டது வருந்தத்தக்கது,..........
எமது முன்னோர்களை நினைக்கையில் பெருமையாக இருப்பதுடன் நாக்கும் ஊறுகின்றது...


நாம் ஓட்டைவடையிலேயே பிரபஞ்சத்தை உள்ளடக்கியவர்கள் என்பதை மறக்கக்கூடாது.இதை அடுத்த சந்ததியினருக்கும் பரப்புவோம்

like if u proud to be a Hindu...தயிர்ல போட்டா தயிர்வட போடலனா மெதுவடை ஓட்டை இருந்தா அது ஓட்டை வட

எதிர்காலத்தில் நாம் பயன்படுத்தும் Batteries எப்படி இருக்கும்?மின்கலங்கள்  மின்சக்தியை இரசாயனசக்தியாக சேமித்துவைத்திருப்பவை.முதலாவது மின்கலம்   Alessandro Volta இனால் 1800 இல் அமைக்கப்பட்டது.செப்பு, நாகத்தகடுகளுடன் மேலும் மெருகூட்டப்பட்ட வடிவம் 1836 இல் டானியல்லினால் உருவாக்கப்பட்டது.இவர்கள்தான் நமது இன்றைய மின்கலத்தின் முன்னோடிகள்.ஆரம்பத்தில் உலக அளவில் சக்திமுதலுக்காக இது பயன்படுத்தப்படாதுவிடினும் தற்பொழுது உலகம் முழுவதிலும் சக்திமுதலாகப்பயன்படுத்தப்பட்டுவருகின்றது.இதற்கு ஆதாரமாக மின்கலங்களை உற்பத்திசெய்யும் நிறுவனங்கள் வருடத்திற்கு 46 பில்லியன் டொலர்களை ஈட்டுகின்றன.

காலாகாலமாக மின்கலங்கள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன.பயன்படுத்துவோம் எறிந்துவிடுவோம்.சில மின்கலங்கள் மட்டும் மீண்டும் மீண்டும் சார்ஜ் ஏற்றிப்பயன்படுத்தலாம்.ஆனால் எவ்வளவு காலம்தான் இப்படியே பயன்படுத்துவது.இதன் காரணமாக சில டிஸைனேர்ஸ் எதிர்கால மின்கலங்களை வடிவமைத்துள்ளார்கள்.இவை எதிர்காலத்தில் பயன்பாட்டுக்குவரலாம்.இவற்றால் சூழலுக்கு பாதிப்பும் குறைவு செலவும் மிச்சம்.

மின்கலத்தின் வரலாறு
Wind-Up Batteries


உங்களது மின்கலத்தில் சார்ஜ் முடிந்துவிட்டது என்றால் கவலைப்படத்தேவையில்லை மின்கலத்தில் சிவப்பு நிறலைட் எரியும். நீங்கள் படத்தில் காட்டியது போல் மின்கல்த்தில் உள்ள பகுதியை கழற்றி சுற்றினாலே போதும் மீண்டும் சார்ஜ் ஏறத்தொடங்கிவிடும்.போதுமான அளவிற்கு சார்ஜ் ஏறியதும் பச்சை நிறத்திற்கு லைட் மாறிவிடும்.சுற்றுவதை நிறுத்திவிட்டு மீண்டும் மடித்து  பற்றியைப்பயன்படுத்திக்கொள்ளலாம். இதை வடிவமைத்தவர் Qian Jiang.

இதை எப்படி பயன்படுத்துவது என்பதை விளக்கும் படம்Finger Battery Charger


இது போன் பற்றி உங்கள் போனில் சார்ஜ் குறைந்துவிட்டால் பற்றையை கழற்றி 130 தரம் படத்தில் காட்டியதுபோல் சுழற்றினால் போதும் சார்ஜ்ஜுடன் கூடிய பற்றி ரெடி.வீணாக சார்ஜ்ஜருடன் கடை கடையாக ஏறியிறங்கத்தேவையில்லை.

அந்த 130 ஏன் என்பதற்கான விளக்கம்தான் மேலே காட்டப்பட்டுள்ளது.இதை டிஸைன் செய்தவர்Yanko Design.

Jump Rope Battery Charger

நீங்கள் உடற்பயிற்சிசெய்யும்போதே சார்ஜ்ஜையும் ஏற்றிக்கொள்ளலாம்.ஸ்கிப்பிங்க் செய்யும் கருவியின் பிடி போன்ற அமைப்பை கொண்டது இந்த சார்ஜ்ஜர்.இதனுள் சார்ஜ் செய்யவேண்டிய மின்கலத்தை பொருத்திவிட்டு நீங்கள் உங்கள்பாட்டிற்கு பயிற்சியை செய்யவேண்டியதுதான்.சார்ஜ்ஜின் விபரம் டிஸ்பிளேயில் தெரியவரும்.

இதை வடிவமைத்தவர்  Jooyong Kim 

Hungry Batteriesஇது எப்படி செயற்படுகின்றது என்ற விபரம் வெளியிடப்படவில்லை.தற்போதைக்கு இது கற்பனையான டிஸைன்தான்.பற்றி சார்ஜ் குறையும்போது சுருங்கிவிடும் இதன் மூலம் பற்றி சார்ஜ் குறைவு என்பதை அறியமுடியும்.பற்றியை கடித்து நசிக்க தேவையில்லை அதுவாக சுருங்கி இயலுமான அளவு மின்சாரத்தை வழங்கும்.இதை  டிஸைன் செய்தவர்  Mac Funamizu.

Continuance USB-Powered Battery
எப்படி பயன்படப்போகின்றது என்பது பார்த்தாலே புரிந்திருக்கும். USB மூலம் இந்த பற்றியை சார்ஜ் செய்யமுடியும்  பின்னர் தேவைப்படும்போது  USB மூலம் உங்கள் போன் ஐபாட் போன்றவற்றிற்கு மின்சாரத்தை வழங்கமுடியும்.இந்த பற்றியிருந்தால் சார்ஜர் என்ற ஒன்று தனியாக தேவையில்லை.டிஸைன் செய்தவர்கள் Haimo Bao, Hailong Piao, Yuancheng Liu & Xiameng Hu

Direct Plug-In Batteries

 Qian Jiang ,Yiying Wu என்பவர்களால் டிஸைன் செய்யப்பட்டது.தனியாக சார்ஜ்ஜர் தேவையில்லை(போகிறபோக்கில் சார்ஜ்ஜரே இருக்காது).பற்றியிலேயே சார்ஜ் செய்வதற்கான பின்னும் இருக்கும்.பற்றியில் இருந்து அதை வெளியே எடுத்து பிளக்கில் செருகி சார்ஜேற்றினால் போதுமானது.One-Size-Fits-All


நாம் பயன்படுத்தும் மின்கலங்கள் பல ஸைஸ்களில் கிடைக்கின்றன.ஏ ஸைஸில் இருந்து டி ஸைஸ் வரை ஒவ்வொரு ஸைசிற்கும் ஒவ்வொரு விலை ஒரு ஸைஸை இன்னொன்றுக்கு பயன்படுத்த முடியாது.சோ இதை எப்படி சமாளிப்பது?இதற்குத்தேவை இந்த மின்கலம்.AtoD Battery இதுmemory foam  இனால் இது ஆக்கப்பட்டிருக்கும்.எனவே பற்றியை நசித்து தேவையானவற்றிற்குள் போட்டுக்கொள்ளலாம்.ஸ்பிறிங்க் மாதிரி தொழிற்படும்.இந்த வகையான மின்கலம் சந்தைக்கு வந்தால் இந்த ஒரு மின்கலமே போதுமானது.டிஸைனுக்கு உரியவர் Yanko .

தொடரும்...