Tuesday, 14 August 2012

உலகின் மிகப்பிரபலமான போட்டோக்கள்


உலகில் மிகவும் பிரபலமான போட்டோக்கிராபர்களினால் பிரபலமாகிய போட்டோக்களின் தொகுப்பு இது.உலகின் மிகவும் பிரபலமான நபர்களையும் சில அசாத்தியமான சூழ்நிலைகளை வெளிப்படுத்தியமையாலும் இவை பிரபலமடைந்தன.

Afghan Girl [1984]
Photographer: Steve McCurryஇந்தப்பெண் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்.நஸனல் ஜியோக்கிரபியின் போட்டோக்கிராபர் Steve McCurry ஆல் எடுக்கப்பட்டது.ஆபாகிஸ்தானின் அகதிமுகாமில் முறைசாராக்கல்வியை கற்கும்12 வயதான  Sharbat என்பவர்தான் போட்டோவில் இருப்பவர்.சாதாரணமாக ஆப்கானிஸ்தானில் போட்டோவிற்கு பெண்கள் மிக அரிதாகவே சம்மதிப்பார்கள்.இவரது போட்டோ உடனேயே நஸனல் ஜியோக்கிரபியின் அட்டைப்படத்தை அலங்கரித்தது.இவர் 1992 இல் அடையாளப்படுத்தப்பட்டார்.


Omayra Sánchez [1985]
Photographer: Frank Fournierகொலம்பியாவில் 1985 நவம்பர் 14 இல் எரிமலைவெடித்தபோது பாதிக்கப்பட்ட 25 000 மக்களில் இவரும் ஒருவர்.அப்போது இவருக்கு 13 வயது.இவர் தொடர்ந்து 3 நாட்கள்  தண்ணீரில் அகப்பட்டுக்கொண்டார்.அவர் இறப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக எடுக்கப்பட்ட புகைப்படம்தான் இது.இந்த புகைப்படம் கொலம்பிய அரசாங்கத்திற்கெதிராக குரல்களை எழுப்பிவிட்டது ஆயினும் இதை ஒரு பிரச்சனையாகவே கொலம்பிய அரசாங்கம் கருதவில்லை.


 Portrait of Winston Churchill [1941]
Photograph from: Yousuf Karsh

இவர்தான் வின்ஸ்ரன் சேர்ச்சில் என அறிமுகப்படுத்துவதற்கு மன்னிக்கவும்.இவரது இந்த போட்டோ சேர்ச்சில் ஓட்டோவாவிற்கு வருகைதந்தபோது எடுக்கப்பட்டது.இது காரிஸ்ஸிற்கு புகழின் உச்சியை தேடித்தந்தது.அத்துடன் லைஃப் மகஸீனின் அட்டைப்படத்தையும்  அலங்கரித்தது.


The plight of Kosovo refugees [1999]
Photographer: Carol Guzy

இந்தப்புகைப்படம் உயரிய விருதாகக்கருதப்படும் Pulitzer விருதை 2000 ஆம் ஆண்டில்வாங்கியது.ஐக்கிய அரபு இரட்சியத்தில் அல்பானியாவில் முட்கம்பி வேலிகளுக்கூடாக 2 வயதே ஆன Kosovo refugee தனது தாத்தாவின் கைகளுக்கு வழங்கப்படும் காட்சிதான் இது.


Stricken child crawling towards a food camp [1994]
Photographer: Kevin Carter

உலகவரலாற்றிலே ஒரே ஒரு போட்டோ யாரையும் உலுக்கி இருக்காது.இது 1994 இல் சூடானில் பஞ்சம் தலைவிரித்தாடிய போது எடுக்கப்பட்டது.ஒரு சிறுவன் ஐ.நாவின் 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ள உணவுச்சாலையை நோக்கி ஊர்ந்து செல்லும் காட்சிதான் இது.அத்துடன் பின்னால் இருக்கும் கழுகு அந்தச்சிறுவன் இறந்தவுடன் அவனை தனது உணவாக்குவதற்காக காத்திருக்கின்றது.இதை படமாக்கியவர் Kevin Carter.இந்த சிறுவன் என்ன ஆனான் என்பது யாருக்குமே தெரியாது போட்டோஎடுத்தவருக்கும் தெரியாது.போட்டோ எடுத்ததுமே அவ்விடத்தை விட்டு அகன்றுவிட்டார் அவர்.பத்திரிகை ஊடகங்கள் கேள்விகேட்ட அழுதுகொண்டே சென்றுவிட்டார் Kevin Carter.ஒரு மாதத்தின் பின் குற்ற உணர்வால் தற்கொலை செய்துகொண்டார்.இது Pulitzer Prize ஐ வாங்கிய புகைப்படங்களில் சிறந்த புகைப்படமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.


Segregated Water Fountains [1950]
Photographer: Elliott Erwitt, Magnum Photos

கறுப்பு வெள்ளை பேதமையை வெளிக்காட்டும் புகைப்படம்தான் இது.1950 இல் எடுக்கப்பட்டது.கைகழுவும் சிங்கில் கறுப்பினத்தவருக்கு,வெள்ளையருக்கு என தனித்தனி போர்ட் போடப்பட்டிருப்பதையும் ஆனால் இரண்டுக்கும் ஒரே பைப்லைனில் நீர் செல்வதையும் இந்தப்புகைப்படம் காட்டுகின்றது.

Burning Monk – The Self-Immolation [1963]
Photographer: Malcolm Browne

1963 ஜூன் 11 இல் வியட்னாமில் எடுக்கப்பட்டது.
ஜூன் 11,1963 ஆம் ஆண்டு வியட்நாமின் தலைநகரான சாய்கான் நகரில் ‘Thich Quang Duc’ என்னும் இந்த புத்தத் துறவி தன்னைத்தானே எரியூட்டிக் கொண்டார். அப்போது தெற்கு, வடக்காக பிரிந்திருந்த வியட்நாமில், தெற்கு வியட்நாமை ஆண்ட ‘Diem’(Ngo Dinh Diem) அரசாங்கம், புத்தமதத்தின் மீதும் புத்த துறவிகள் மீதும் நிகழ்த்திய அடக்குமுறைகளுக்கு எதிராக இதை அவர் செய்தார். இப்படத்தை எடுத்த malcolm Browne இப்படத்திற்காக புலிட்சார் விருதுப் பெற்றார்.
ஜூன் 11, 1963-இல் சாய்கானின் முக்கிய வீதி ஒன்றுக்கு, இரண்டு சக துறவிகளோடு ஒரு காரில் வந்து இறங்கினார். நடுவீதிக்கு சென்று அமைதியாக தியான நிலையில் அமர்ந்துக் கொண்ட இவர் மீது அவரின் சக துறவி ஒருவர் பெட்ரோலை ஊற்றினார். பிறகு தன்னைத் தானே எரியூட்டிக் கொண்டார். நான்கு அடி உயரம் தீ கொழுந்துவிட்டு எரிந்த போதும் சத்தம் போடாமல் அமைதியாக அமர்ந்திருந்தார். அப்போது வீதியில் இருந்த நூற்றுக்கணக்கானோர் இதை அதிர்ச்சியோடு பார்த்தனர். 

காவல்துறையினர் அவரைக் காப்பாற்ற முயன்றனர், ஆனால் சுற்றி நின்ற புத்த பிட்சுகளை மீறி அவர்களால் செல்ல முடியவில்லை. ஒரு காவல்துறை அதிகாரி தரையில் பயபக்தியோடு மண்டியிட்டு, எரிந்துக்கொண்டிருந்த துறவியை தொழுக துவங்கினார். பெரும்பாலானோர் அதிர்ச்சியில் அமைதியாக இருக்க, சிலர் அலறவும் சிலர் பிராத்தனைச் செய்யவும் துவங்கினார்.
 


Phan Thi Kim Phuc
     Photographer:Nick Ut

நூற்றாண்டின் சிறந்த 10 புகைப்படங்களில் ஒன்றாக இடம்பிடித்த இப்படம், இதை படம்பிடித்த நிக் அட் (Nick Ut) என்ற வியட்நாம் பத்திரிகைக்காரருக்கு புலிட்சர் விருதை வாங்கிக் கொடுத்தது.  இப்புகைப்படத்திலிருந்த சிறுமி பான் தி கிம் பக் (Phan Thi Kim Phuc) காப்பாற்றப்பட்டு போரின் கொடுமைகளுக்கு எதிரான செயற்பாட்டாளராக, பேச்சாளராக பின்னர் பிரபலமானார். இது அமெரிக்க மக்களிடையே பெரிய கொந்தளிப்பை உருவாக்க,அதிபர் நிக்சன் இது ஒரு போலி புகைப்படம் என மக்களுக்குக் கூறினார், அமெரிக்க இராணுவத்தினர், அந்தக் குண்டு புரட்சிக்காரர் போட்டது என்றனர். ஆனால், போரை நிறுத்தச்சொல்லி மக்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்யுமளவுக்கு இந்தப் புகைப்படம் பெரும் பாதிப்பை அமெரிக்காவில் ஏற்படுத்தியது. 


Bliss [2000]
Photographer: Charles O’Rear

கலிபோர்னியாவில் அமைந்துள்ள நாபா நாட்டின் சொனோமா பள்ளத்தாக்கினருகில் எடுக்கப்பட்ட புகைப்படம்தான் இது.பச்சை மலை நீல வானம் அழகான மேகங்கள் என பிரமிக்கும் ஒழுங்கமைப்புடன் இருந்தமையால் இது பலரால் விரும்பப்பட்டது.Windows XP இல் லூனா தீம் இதுதான்.உலகின் அதிகமானோரால் பார்க்கப்பட்ட புகைப்படமும் இதுதான்(Windows XP இருக்கும்போது இதன் முகத்தில் தானே முழித்திருப்பார்கள்) நாபா பள்ளத்தாக்கைப்பற்றி 1979 இல் வெளியான நஸனல் ஜியோக்கிரபி கட்டுரையில் இப்படம் வெளியாகியிருந்தது.இதன் உரிமையாளர் Charles O’Rear இதற்காக 200 மில்லியன் டாலர்களைப்பெற்றார்.

The Triangle Shirtwaist Fire [1911]
Photographer: International Ladies Garmet workers Union

நியீயோர்க்கின் Triangle Shirtwaist Company யில் ஏற்பட்ட தீவிபத்தின் பின்னரான பிணங்களின் காட்சிதான் இது.கம்பனியின் சட்டத்தின்படி கதவைபூட்டிவிட்டுத்தான் வேலைசெய்யவேண்டும்.இதில் அதிகமாக பெண்கள்தான் வேலைசெய்தார்கள்.இதனால் தீவிபத்தின் போது உடனடியாக வெளியேறமுடியாமல் 146 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள்.
Karl Max
Photographer: Unknown

கார்ல்மார்க்ஸின் புகைப்படத்தை எடுத்தவர் யார் என்று தெரியவில்லை.

2 comments:

 1. அருமையான புகைப்படங்கள் தந்தமைக்கு .நன்றி.
  5வது புகைப்படம் மனிதாபிமானம் இல்லாத புகைபடகாரரின் கொடூர எண்ணத்திற்கு ஒரு சாட்சி.மனம் பதைக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. சில சமயம் புகைப்படம் எடுப்பவர்களை நினைக்கும்போது கோபம்வருகிறதுதான்.ஒருவர் தீக்குளிக்கும்போது ஓடி ஓடி போட்டோ எடுக்கின்றார்களே தவிர காப்பாற்ற யாரும் முனைவதில்லை.
   வருகை தந்தமைக்கு நன்றிகள் சகோ

   Delete