Friday, 10 August 2012

சக்திமான் நினைவிருக்கிறதா?சக்திமான் எமது சிறியவயது ஹீரோ.அந்த நாட்களில் ஒரே ஒரு சானல்தான் யாழ்ப்பாணத்தில் வேலைசெய்தது அது  தூர்தர்ஸன் தான்.சன் டி.வி எல்லாம் அப்போது அறிமுகமில்லை.தூரதர்ஸனில் ஜேய் ஹனுமான்,நிகழ்வுகள் அதோடு சக்திமானையும் பார்ப்பது வழக்கம். அதில் நிகழ்வுகள் என்ற தொடர் இரவு 11 மணிக்கு ஒளிபரப்பப்படும் அது ஆவிகள் தம் சாவுக்கு காரணமானவர்களை பழிவாங்கும் கதை ஆகையால் இரவில் வீட்டிற்கு வெளியில் செல்லப்பயந்து யன்னலினூடாகவே சிறுனீர் கழித்த சம்பவங்களும் நடந்தன .

அவ்வளவு பீதி.சக்திமான் தொடர் ஒவ்வொரு சனி 11 மணிக்கு ஒளிபரப்பப்படும்.தனியார்நிலையத்தில் கல்விகற்ற போது தனியார்கல்வினிலையம் காலை 7.30 ற்கு ஆரம்பமாகி 11 மணிக்கு முடிப்பார்கள்.பெரும்பான்மையான எனது சகபாடிகளுக்கும் சரி எனக்கும் சரி 10 மணிக்கு மேல் படிப்பு மண்டைக்குள் ஏறுவது சற்றுக்கடினமாகத்தான் இருந்தது.காரணம் 11 மணிக்கு சக்திமான் இருப்பதுதான்.1997 இல் யாழ்ப்பாணத்தில் இணையமோ கணணிவசதிகளோ ஒரிரு இடங்களில்தான் இருந்தன இதன் காரணமாக சக்திமானின் புகைப்படங்களோ..அல்லது கார்ட்கள் போன்ற எதுவும் எம்மிடம் இருந்ததில்லை.ஆனால் ஒரு சகபாடி எங்கிருந்தோ ஒரு படத்தைக்கொண்டுவந்துவிட்டான்.அந்த ஒரே ஒரு படத்தால் ஒரே நாளில் ஹீரோ ஆகிவிட்டான் அவன்.

11 மணிக்கு வகுப்பு முடிவடைந்ததும் விழுந்தடித்து வீடுநோக்கி ஓடிதொலைக்காட்சிக்கு முன்னால் ஓட்டம் நிறைவடையும்.சக்திமான் தொடக்கப்பாடல் முடிவடைந்த பின்னர்தான் பெரும்பாலான நேரங்களில் வீடுவரமுடிந்தது.சக்திமான் தொடரின் இடைவேளையின் போதுதான் போய் மதிய சாப்பாட்டை எடுத்துவருவேன்.பின்னர் சாப்பாடு முடிந்ததோ இல்லையோ தட்டுடன் தொடர் முடியும்வரை இருப்பது வழக்கம்.எனது நண்பர்களுக்கும் இதே நிலைதான். நாம் பல நேரங்களில் சக்திமான் கில்விஸனிடம் தோற்பாரா? கீதாவிஸ்வாஸை காப்பாற்ற வருவாரா?கங்காதரர் அகப்படுவாரா? என்று நண்பர்களிடம் வாக்குவாதம் செய்துமிருக்கிறோம்.

ஏதோ நாம் மட்டும் இதற்கு அடிமையாகவில்லை இந்தியாவில் இருக்கும் அனைத்து சிறுவர்களுக்கும் ஏகோபித்த ஒரே ஹீரோவாக சகலரையும் அடிமையாக்கியவர் சக்திமான்.பல சிறுவர்கள் சக்திமான் வந்து காப்பாற்றுவார்,அவரைபோல் சாகசம் செய்யலாம் என்று உயரமான கட்டடங்களில் இருந்து குதித்து இறந்தமை இதற்கு நல்ல ஆதாரம்.இதனால் பெற்றோர் மிகுந்த சங்கடத்திற்குள்ளானார்கள் இவ்வாறான சம்பவங்களின் பின்னர் வெளிவந்த தொடர்களில் இவை கற்பனையே இவற்றை செய்து பார்க்க முயற்சிக்காதீர்கள் என்று எச்சரிக்கை விடப்பட்டதுடன் எவ்வாறு சூட்டிங்க் எடுக்கப்படுகின்றது என்பதையும் ஒளிபரப்பினார்கள்.

டைட்டிள் சோங்க்


சக்திமான் என்றகற்பனைக்கதாப்பாத்திரத்தை உருவாக்கியவர்கள் டிங்கெர் ஜானி மற்றும் முகேஸ் கண்ணா.முகேஸ்கண்ணா என்பவர்தான் சக்திமானாக அசத்தியவர்.1997 செப்டெம்பர் 13 இல் சக்திமானின் முதலாவது எபிசோட் ஒளிபரப்பப்பட்டது.
கதை இதுதான் தீய சக்திகளுக்கு எதிராக போராடும் வீரனாக சக்திமான் தெரிவு செய்யப்படுகின்றார். சக்திமானுக்கான சக்திகள் 7 யோகிகளால் வழங்கப்படுகின்றன.இதற்காக இவருக்கு குண்டலினி யோகா பயிற்சியளிக்கப்படுகின்றது.இதனால் அசாத்திய சக்திகளை பெற்றுவிடுகிறார் நம்ம தல.மரணத்தை வெல்வதற்கான சடங்கை செய்தார்கள் ஆனால் அது ஈடேறவில்லை பதிலாக சாதாரண மனிதனை விட அதிகாஅயுள்மட்டும் கிடைக்கின்றது.இறுதியில் அக்கினி குண்டத்தில் இறங்கியதும் பஞ்சபூதங்களின் சக்தி கிடைக்கிறது.இவ்வாறு சக்திமான் உருவாகினார்.

சக்திமானுக்கு பல எதிரிகள் அவர்களுள் முக்கிமான எதிரி தம்ராஜ்கில்விஸன்.இவனை அழிக்கும் நோக்கத்திற்காகவே சக்திமான் படைக்கப்பட்டாரென்றும் கூறலாம்.அத்துடன் கில்விஸனுடன் இலவச இணைப்பாக பல சிறிய வில்லன்களும் இருக்கிறார்கள்.சலாம் அலைக்கும்...அலைக்கும் சலாம் என்பதுபோல் கில்விஸன்  வரும்போதும் ஒரு வார்த்தை பிரயோகிக்கப்படும்  நினைவுக்கு வந்துவிட்டதா அதே தான் க.க.க.போ  "இருள் நீடிக்கிறது".
சக்திமான் என்னேரமும் அதே உடையில் உலாவர முடியாதல்லவா? அதனால் மாறுவேடத்தில் மக்களோடு மக்களாக சுற்றுவதற்காக பற்கள் சொண்டைக்கிளித்துக்கொண்டிருக்கும் கெங்காதரர் ஆனார்.அதில் தன்னை யார் என்று கேட்பவர்களுக்கு இவர் கூறும் விளக்கம்தான் ஹைலைட்.."என் பெயர் கங்காதரர் வித்யாதரர் மாயாதர் ஓம்காரர் சாஸ்திரி" இதோடு கேட்பவர்களின் நட்டு கழன்றுவிடும்.

கீதா விஸ்வாஸ்
அத்தோடு வேலையும் வேண்டுமல்லவா இதனால் ஒரு பத்திரிகை நிறுவனத்தில் பணிபுரிகிறார் கெங்காதரர்.இந்த இடத்தில்தான் அடுத்த முக்கிய கதாப்பாத்திரம் அறிமுகம் கீதா விஸ்வாஸ் இவர் சக்திமானை காதலிப்பவர்.கீதா விஸ்வாஸாக நடித்தவர் வைஸ்ணவி.ஹீரோயின் வந்துவிட்டாலே புரிந்திருக்கும் இதனால் வில்லன்களிடம் ஹீரோ படும் அத்தனை அவஸ்தைகளையும் சக்திமானும் பட்டார்.

இத்தொடர் மொத்தமாக  461 எபிசோட்களாக வெளிவந்தது.அனைத்து எபிசோட்களையும் இலவசமாக பார்வையிட.1998 இல் 

MDb ரேட்டிங்கில் 10 ற்கு 6.9 ஐ பெற்றுள்ளது.

எபிசோட் முடிவில் சக்திமான் கருத்துக்கள் கூறுவார்.

சின்ன சின்ன விடயங்கள் பெரிய பெரிய கருத்துக்கள்.உண்மையில் சக்திமான் தொடர் சுப்பர்மான் திரைப்படத்தை சார்ந்து எடுக்கப்பட்டதுதான்.ஆனால் அத்துடன் நிற்கவில்லை எக்ஸ்மான் என்று பல திரைப்படங்களும் உள்ளே தலைகாட்டியிருந்தன.ஆரம்பகாலங்களில் ஹொலிவூட் எமக்கு அறிமுகமில்லாத காரணங்களால் இவை நமக்கு புலப்படவில்லை.சக்திமான் முடிவடைந்த பின்னர் ஆரியமான் என்ற தொடரை அறிமுகப்படுத்தியிருந்தார்கள் முகேஸ் கண்ணாதான் அதிலும் ஹேரோ ஆனால் அது ஆரம்பிக்கும் பொழுது நான் ஸ்டார்வேர்ஸ் பார்த்துவிட்டிருந்தேன்.சோ பருப்பு வேகல.

எது எப்படியிருந்தாலும் நமது சிறியவயது ஹீரோ சக்திமான் தான் அத்துடன் இந்தியாவின் முதலாவது சூப்பர் ஹீரோவும் இவர்தான்.இதன் பின்னர் முகேஸ்கண்ணா வேறுதொலைக்காட்சித்தொடர்களில் நடித்தாலும் எதிர்ப்பட்டவர்கள் இவரை சக்திமான் என்றுதான் அழைத்தார்கள்.

பல சக்திமான் கொமிக்ஸ்களும் வெளிவந்த்துள்ளன.


சக்திமான் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. சக்திமானை 3டி திரைப்படமாக எடுக்க முடிவு செய்துள்ளார்கள்.2012 மார்ச் 24 இல் இதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள்.சக்திமான் சீரிஸ்ஸில் நடித்த அதே முகேஸ்கண்ணாதான் இத்திரைப்படத்திலும் ஹேரோவாக நடிக்கின்றார்.இதைப்பற்றி முகேஸ் கூறும்பொழுது"இப்பொழுது நான் திரைப்படத்தில் மட்டுமே எனது கவனத்தை செலுத்துகின்றென்.சக்திமான்தான் இந்தியாவின் முதலாவது சூப்பர் ஹீரோ கிரிஸ்ஸோ ரா.வன்னோ ஜி வன்னோ அல்ல.சக்திமான் திரைப்படத்தை விரைவில் வெளியிடுவோம்" என கூறியுள்ளார்.தகவல் ..டைம்ஸ் ஒஃப் இண்டியா

No comments:

Post a Comment